விசாரணை கைதி, சிறையில் இறந்த சம்பவம் தொடர்பாக, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு, செஷன்ஸ் கோர்ட் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2002ம் ஆண்டு, குஜராத் மாநிலத்தில் மோடி, முதலமைச்சராக இருந்தார். அப்போது, அந்த மாநிலத்தில், பெரிய கலவரம் ஏற்பட்டது. இதுதொடர்பன வழக்கை, ஜாம் நகர் எஸ்பியாக, ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ்பட் விசாரித்தார்.

பின்னர், அதற்கான அறிக்கையை கடந்த 2011ம் ஆண்டு, உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்தார். அதில், முதல்வர் மோடிக்கு எதிராக குறிப்பிடப்பட்டு இருந்தது. ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ்பட் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் இருந்தன. இதனால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 2015ம் ஆண்டு,பணி நீக்கமும் செய்யப்பட்டார்.

இதற்கிடையில், கடந்த 1990ம் ஆண்டில், விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ஒருவர், திடீரென இறந்தார். இதுகுறித்த வழக்க, ஜாம்நகர் மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. அப்போதைய எஸ்பியாக இருந்த சஞ்சீவ் பட், உத்தரவின் பேரில் போலீசார் நடத்திய தாக்குலில் கைதி இறந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், விசாரணை கைதி இறந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த கோர்ட், எஸ்பியின் உத்தரவின்படி போலீசார், விசாரணை கைதியை தாக்கியுள்ளனர். அதனால், அந்த இறப்பு சம்பவத்துக்கு சஞ்சீவ்பட் காரணம் என தெரிகிறது. இதனால, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது என தீர்ப்பளித்தது.