Asianet News TamilAsianet News Tamil

அப்பாடா... அமலாக்கத்துறையிடம் தப்பிய ப.சிதம்பரம்..!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்யப்பட்ட நிலையில், திங்கட்கிழமை வரை அமலாக்கத்துறை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

INX Media Case... Chidambaram can't be arrested by Enforcement Directorate till Monday
Author
Delhi, First Published Aug 23, 2019, 2:22 PM IST

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்யப்பட்ட நிலையில், திங்கட்கிழமை வரை அமலாக்கத்துறை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை தவிர்க்க, முன்ஜாமீன் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ப. சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீடு மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது என தலைமை நீதிபதி கூறிவிட்டார். இதனிடையே, நேற்று முன்தினம் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். INX Media Case... Chidambaram can't be arrested by Enforcement Directorate till Monday

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை திங்கட்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். மேலும், அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. INX Media Case... Chidambaram can't be arrested by Enforcement Directorate till Monday

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ப.சிதம்பரத்திற்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கினர். அதாவது, ஆகஸ்ட் 26-ம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை விதித்தனர். இந்த இரண்டு வழக்குகளும் மீண்டும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios