Asianet News TamilAsianet News Tamil

8வது சர்வதேச யோகா தினம் - பிரதமர் மோடியுடன் 15,000 பேர் பங்கேற்பு

8வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னட்டு நாட்டின் 75 முக்கிய இடங்களில் நடைபெறும் யோகா நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர். மைசூருவில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.
 

international yoga day 2022 - PM Modi with 15000 people participated in the Mysore yoga event
Author
Mysore, First Published Jun 21, 2022, 7:15 AM IST

8வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 'மனிதநேயத்துக்கான யோகா (Yoga for humanity)' என்ற கருத்தை மையமாக கொண்டு இந்த ஆண்டுக்கான யோகாதினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னட்டு நாட்டின் 75 முக்கிய இடங்களில் நடைபெறும் யோகா நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர். மைசூருவில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். மைசூரு அரண்மனை வளாகத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் சேர்ந்து கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்பை மற்றும் பொதுமக்கள் 15,000 பேர் பங்கேற்றுள்ளனர். 

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்த பிரபஞ்சம் நமது உடலிலிருந்தும், ஆன்மாவிலிருந்தும் தொடங்குகிறது. நம்மில் இருந்தே இந்த பிரபஞ்சம் தொடங்குகிறது. இந்த யோகாசனங்கள் இவை அனைத்தையும் நமக்கு உணர்த்துகிறது என்றார. அதைத்தொடரந்து, மக்களுடன் சேர்ந்து அவரும் சூரிய நமஸ்காரம் உள்ளிட்ட யோகாசனங்களை செய்தார். 

International Yoga Day 2022: சர்வதேச யோகா தினம் 2022 - ‘தீம்’ என்னவென்று தெரியுமா ? இதுதான் !! 

டெல்லி லோட்டஸ் டெம்பிள் வளாகத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார். உத்தரபிரதேச மாநிலம லக்னோ ராஜ்பவன் வளாகத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டார். 

International Yoga Day 2022 : உடலை உறுதி செய்யும் சூரிய நமஸ்காரம் - எளிதாக செய்வது எப்படி ? 

இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 17000 அடி உயரத்தில் பனிபடர்ந்த மலைப்பகுதியில் யோகாசனங்களை செய்து கொண்டாடினர். 

 

 

தமிழகத்தில், சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர ஆர்.என் ரவி தலைமையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். 

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios