international court of justice pronounce verdict kulbhusan jadav case tomorrow
இந்தியர் குல்பூஷன் ஜாதவ் மரண தண்டனை விவகாரம் குறித்த வழக்கில் சர்வதேச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.
இந்தியாவை சேர்ந்த கப்பற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் உளவு பார்த்ததாக பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யபட்டார். பின்னர், அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதற்கு இந்தியா தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் குல்பூஷனின் மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் அவரது தாயார் தரப்பில் இருந்து மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், சர்வதேச நீதிமன்றம் நாளை பிற்பகல் 3.30 மணியளவில் தீர்ப்பு அளிக்க உள்ளது.
