2020-21 நிதியாண்டில் ஜிடிபி, பணவீக்கம் எதிர்பாராத அளவுக்கு குறையும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தகவல் தெரிவித்துள்ளார். 

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் நான்காவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில், பல முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். அதில், வீடு, வாகனம் உள்ளிட்ட கடன்களுக்கான மாத தவணையை செலுத்துவதற்கான சலுகை ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் என மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். ஏற்கனவே மாா்ச், ஏப்ரல் மற்றும் மே என மூன்று மாதங்கள் சலுகை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த சலுகை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கடன் தவணைகளை செலுத்த கூடுதலாக 3 மாத அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வங்கிக் கடன்களுக்கான மாதாந்திர தவணை தொகை குறையும். ஜிடிபி சிறிதளவு கூட வளர்ச்சி ஏற்படும் சூழல், இந்த நிதியாண்டில் இல்லை. ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை மேம்படுத்தவும், மாநிலங்களுக்கான நிதிப் பிரச்சனைகளை சரிசெய்யவும் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.

உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை உயரலாம் என ரிசர்வ் வங்கி அச்சம். உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில் வீழ்ச்சியை சந்திக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.