நிர்வாண வீடியோவை காட்டி 9-ம் வகுப்பு மாணவியை மிரட்டிய நண்பர்கள்.. இன்ஸ்டா நட்பால் வந்த வினை..
குஜராத்தில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியை நிர்வாணமாக வீடியோ எடுத்த இன்ஸ்டாகிராம் நண்பர்கள் அதை வைத்து மிரட்டி பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளியில் படிக்கும் உங்கள் பிள்ளைகளுக்கு ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுக்கும் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும் என்பதை மீண்டும் ஒரு சம்பவம் வலியுறுத்தி உள்ளது. மேலும் தங்கள் பிள்ளைகளின் சமூகவலைதள பயன்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்பதையும் இந்த சம்பவம் மீண்டும் சுட்டிக்காட்டி உள்ளது.
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் வசிக்கும் பெற்றோர் தங்கள் பெண் பிள்ளைக்கு 3 மாதங்களுக்கு முன்பு ஸ்மார்ட்போன் வாங்கி கொடுத்துள்ளனர். அப்போது இன்ஸ்டாகிராமில் மிட்டல் சோலங்கி என்ற பெயரில் ஒரு நண்பர் கோரிக்கை வந்துள்ளது. அந்த பெண்ணை அந்த கோரிக்கை ஏற்றுள்ளார். இதை தொடர்ந்து சோலங்கி, தன்னை கிஷன் பட்டேல் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளார். மேலும் தன்னுடன் நட்பாக பழகும் படி அந்த மாணவியிடம் கூறியுள்ளார். இதை தொடர்ந்து அந்த மாணவியும் 2 மாதங்களாக அவருடன் சேட்டிங்கில் ஈடுபட்டுள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஒரு நாள் 19 வயதாகும் கிஷன் பட்டேல் மோர்பியில் உள்ள ஆள்நடமாட்டமில்லா இடத்திற்கு அந்த மாணவியை சந்திக்க வேண்டும் என்று அழைத்துள்ளார். அப்போது அந்த மாணவியின் சம்மதமின்றி செல்ஃபி எடுத்ததாகவும், அந்த பெண்ணை பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தி உள்ளார்.
இதை தொடர்ந்து அந்த செல்ஃபியை சமூகவலைதளங்களில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்ட தொடங்கி உள்ளார். மேலும் அந்த பெண்ணுக்கு வீடியோ கால் செய்து, அவரின் ஆடைகளை கழற்ற சொல்லி அப்புறப்படுத்தி உள்ளார். மேலும் அந்த பெண்ணின் நிர்வாண வீடியோவை பதிவு செய்து தொடர்ந்து மிரட்டி உள்ளார். நிர்வாண வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக கூறி பணம் பறிக்க தொடங்கி உள்ளார்.
நிதாரி தொடர் கொலை வழக்கு: 16 பெண்களை பலாத்காரம் செய்து கொன்ற இருவரும் விடுதலை!
தனது வீட்டிலிருந்த ரூ.70,000 பணம் மற்றும் தனது தாயின் தங்க நகைகளை எடுத்து கிஷனிடம் கொடுத்துள்ளார். இதனிடையே அந்த மாணவி கடந்த பள்ளிக்கு செல்ல மறுத்ததும், எப்போதும் சோகமாக இருந்ததையும் அவரின் தாய் கவனித்துள்ளார். தனது மகளின் வழக்கத்திற்கு மாறான நடத்தையால் சந்தேகமடைந்த தாய் அவரிடம் விசாரித்த தனக்கு நடந்ததை மகள் விவரித்துள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட தாய் மோர்பியில் உள்ள காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் கிஷன் படேலை கைது செய்தனர். மேலும் மிட்டல் சோலங்கியையையும்போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மிட்டலை கைது செய்த பிறகு இருவரிடமும் விசாரணை நடத்த உள்ளதாகவும், இந்த இருவரும் சேர்ந்து சமூக வலைதளங்களில் மற்ற பெண்களை மிரட்டி ஏமாற்றி உள்ளனரா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்.