The worlds oldest Indias 2nd aircraft carrier INS turbine

* உலகின் மிகப்பழமையானதும், இந்தியாவின் 2-வது விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விராட் தனது 57 ஆண்டுகால சேவையை முடித்து நேற்றுடன் ஓய்வு பெற்றது.

* 1959ம் ஆண்டு நவம்பர் 19-ந்தேதி இங்கிலாந்து அரசின் கப்பல் படையில் எச்.எம்.எஸ். ஹெர்ம்ஸ் என்ற பெயரில் சேர்க்கப்பட்டது

* இந்த கப்பல் அந்த நாட்டுக்கு 25 ஆண்டு காலம் சேவையாற்றி கடந்த 1984ம் ஆண்டு ஓய்வு பெற்றது. 

* அதன்பின், கடந்த 1987ம் ஆண்டு இங்கிலாந்திடம் இருந்து 46.5 கோடி டாலருக்கு (ரூ.3,102 கோடி)இந்திய அரசால் வாங்கப்பட்டு, ஐ.என்.எஸ். விராட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

* உலகின் மிகச்சிறந்த விமானம் தாங்கி கப்பலில் ஒன்றாக கருதப்படும் ஐ.என்.எஸ். விராட், 23 ஆயிரத்து 900 டன் எடையும், 226 மீட்டர் நீளமும், 49 மீட்டர் அகலமும் கொண்டது.

* இறுதியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் மும்பையில் இருந்து கொச்சிக்கு பயணம் செய்தது. அதன்பின் அங்கிருந்து மும்பையில் கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஐ.என்.எஸ். விராட் இன்றுடன் ஓய்வு பெற்றது.

* மும்பை கடற்படை தளத்தில் நடந்த பரிவு உபசார விழாவில் வீராட் கப்பலின் கமாண்டர்களாக பணிபுரிந்த 22 பேரில் 21 பேர் பங்கேற்றனர். அவர்கள் உணர்ச்சி பொங்க வீராட் போர்க்கப்பலுக்கு விடை கொடுத்தனர்.



*குஜராத் மாநிலத்தில் உள்ள அலங் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ள ஐ.என்.எஸ். விராட் கப்பல் 4 மாதம் நிறுத்தப்பட்டு இருக்கும், அதற்குள் யாரும் இதை வாங்க வரவிட்டால் இதை உடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

*ஆந்திர மாநில அரசு வீராட் கப்பலை வாங்கி விசாகப்பட்டினத்தில் நிறுத்தி அருங்காட்சியகமாக மாற்றும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.1000 கோடி தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

* உலகிலேயே நீண்டகாலம் கப்பற்படையில், 57 ஆண்டுகாலம் (இங்கிலாந்து கப்பற்படையில் 22 ஆண்டுகாலம்) பணியாற்றிய கப்பல் ஐ.என்.எஸ்.விராட். இது கின்னஸ் சாதனையிலும் இடம் பெற்றது. இந்திய கப்பல்களுக்கு தாய் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறது.

* இந்தியாவின் 2-வது விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விராட் கடைசியாக கடந்த 2016ம் ஆண்டு ஜூலை 23ந்தேதி மும்பையில் இருந்து கொச்சிக்கு பயணம் மேற்கொண்டது. அதன்பின் அங்கிருந்து கயிறு கட்டி மும்பைக்கு இழுத்துவரப்பட்டது.

* ஐ.என்.எஸ். விராட் முழுமையான செயல்பாட்டில் இருக்கும் போது இதில் 1500 வீரர்கள் பணியாற்றினர். பின், இது செயல்பாட்டில் இருந்து நீக்கப்படும்போது 300 வீரர்கள் மட்டுமே இருந்தனர்.

* ஐ.என்.எஸ். விராட் கப்பலை ஓய்வுக்குப்பின் இதை அருங்காட்சியகமாக மாற்ற கப்பற்படை திட்டமட்டுள்ளது.

* கடலில் 2,250 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.என்.எஸ். விராட் உலகை 27 முறை சுற்றி வந்துள்ளது(10.94 லட்சம் கி.மீ.). இந்த கப்பலில் இருந்து விமானங்கள் 23 ஆயிரத்து 34 மணிநேரம் பறந்துள்ளன.