டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் மீது, மாணவர் ஒருவர் மை வீசியது குறித்து தெரிவிக்கையில், என் மீது மை வீசியவர்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று தமது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சங்கர் சபதாஸ் என்பவரின் இரங்கல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ராஜஸ்தான் மாநிலம் பிகானீருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சென்றார். பின்னர், இரவு 10 மணியளவில் இரங்கல் தெரிவித்துவிட்டு வெளியே வந்த கெஜ்ரிவால் மீது, தினேஷ் ஓஜா என்ற மாணவர், தேச துரோகி என்று கூறியபடியே அவர் மீது மை வீசியுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் மீது மாணவர் ஒருவர் மை வீசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு பாதுகாப்புக்காக வந்ததிருந்த போலீசார் தினேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தமது டுவிட்டர் பக்கத்தில் தம் மீது மை வீசியவர்களை கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என்று கூறியுள்ளார். "ஹூம்ம்... என் மீது மை வீசியவர்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும். அவர்களை நான் வாழ்த்துகிறேன்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
