Viral Video:IndiGo: விமான ஜன்னலைத் திறங்க, எச்சில் துப்பணும்! விமான ஊழியரிடம் கேட்ட பயணி: வைரல் வீடியோ
விமானத்தில் ஊழியர்களிடம் வாக்குவாதம், தவறாக நடத்தல், சக பயணி மீது சிறுநீர் கழித்தல், அவசரவழியைத் திறத்தல் போன்ற சம்பவங்களைத் தான் பார்த்திருப்போம். ஆனால், ஒரு பயணி குட்கா எச்சில் துப்ப வேண்டும் ஜன்னல் கதவைத் திறங்கள் என்று விமான ஊழியரிடம் கேட்டுள்ளார்.
விமானத்தில் ஊழியர்களிடம் வாக்குவாதம், தவறாக நடத்தல், சக பயணி மீது சிறுநீர் கழித்தல், அவசரவழியைத் திறத்தல் போன்ற சம்பவங்களைத் தான் பார்த்திருப்போம். ஆனால், ஒரு பயணி குட்கா எச்சில் துப்ப வேண்டும் ஜன்னல் கதவைத் திறங்கள் என்று விமான ஊழியரிடம் கேட்டுள்ளார்.
இந்த சம்பவம் ஏதோ எதேச்சையாக நடந்தவை அல்ல. நகைச்சுவைக்காக ஒரு பயணி இதுபோன்று விமான ஊழியரிடம் கேட்டபோது, அதற்கு அந்த விமான ஊழியர் எதிர்வினையை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதுதான் வைரலாகியுள்ளது.
ஒரு நாளைக்கு ரூ.2,000 செலவு; 20 கோடி மதிப்புள்ள நாயை காண குவிந்த பொதுமக்கள் - எங்கு தெரியுமா?
இந்த சம்பவம் இன்டிகோ விமானத்தில் நடந்துள்ளது. கோவிந்த் ஷர்மா என்ற பயணி கையில் குட்காவை கசக்குவது போல் செய்கை செய்து, அங்கு வந்த விமான ஊழியரிடம் கேட்டார். “ எக்ஸ்கியூஸ்மி, குட்கா சாப்பிடிருக்கேன், எச்சில் துப்ப வேண்டும் ஜன்னலைத் திறக்க முடியுமா” என்று கேட்டவுடன் அதற்கு விமான ஊழியர் சிரித்துவிட்டு சென்றார். இந்த சம்பவத்தை வீடியோவாவை பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோதான தற்போது வைரலாகியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி நியூயார்க் டெல்லி ஏர்இந்தியா விமானத்தில் மூதாட்டி ஒருவர்மீது போதை ஆசாமி ஒருவர் சிறுநீர் கழித்தார்.இந்த சம்பவத்தில் அந்த ஆசாமியை போலீஸார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம், அந்த ஆசாமிக்கு 4 மாதங்கள் விமானத்தில் பறக்கத் தடை, பைலட் 3 மாதங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பெங்களூரு – ஹைதராபாத்... 4 மணிநேரத்தில் பயணிக்கும் புதிய வந்தே பாரத் ரயில்
இந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட மூதாட்டி ஏர் இந்தியா குரூப் தலைவர் என் சந்திரசேகரனுக்கு கடிதம் எழுதி விவரங்களை தெரிவிக்கும்வரை, போதை ஆசாமி மீது விமானநிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.