Vande Bharat Express: பெங்களூரு – ஹைதராபாத்... 4 மணிநேரத்தில் பயணிக்கும் புதிய வந்தே பாரத் ரயில்
பெங்களூரு – ஹைதராபாத் இடையே இயக்கப்பட உள்ள புதிய வந்தே பாரத் ரயில் வழக்கமான பயண நேரத்தைவிடக் குறைவான நேரத்தில் பயணிக்க உள்ளது.
தெற்கு மத்திய ரயில்வே சார்பில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் வரை புதிய வந்தே பாரத் அதிவிரைவு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. இந்த ரயில் இரு நகரங்களுக்கு இடையேயான 570 கி.மீ. தொலைவை வெறும் 4 மணிநேரத்தில் கடக்கும் என்று சொல்லப்படுகிறது.
பெங்களூரிலிருந்து ஹைதராபாத்தின் கச்சிகுடா வரை செல்ல பேருந்துப் பயண நேரம் 10 மணிநேரம் ஆகும். புதிய வந்தே பாரத் ரயில் வந்துவிட்டால் இந்தப் பயண நேரம் வெறும் நான்கு மணிநேரமாகக் குறையும்.
வரும் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில் இந்த ரயில் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
INS Vagir: கடற்படை வலிமையைக் கூட்டும் 5வது கல்வாரி நீர்மூழ்கிக் கப்பல்
2023-24 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் சுற்றுலாவை வசதிகளை மேம்படுத்தும் வகையில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களை இணைக்கும் வகையில் 300 முதல் 400 புதிய வந்தே பாரத் ரயில்களை இயக்குவதற்கான அறிவிப்பு இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.
வந்தே பாரத் ரயில்கள் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகின்றன. சென்னை – மைசூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் 504 கி.மீ. தொலைவை 3 மணிநேரத்தில் கடக்கிறது. எனவே, பெங்களூரு ஹைதராபாத் இடையேயான வந்தே பாரத் ரயில் 4 மணிநேரத்தில் பயணிப்பதாக இருக்கும்.
20 ரூபாய்க்காக கத்திக்குத்து... விபரீதத்தில் முடிந்த சில்லறைச் சண்டை!
பெங்களூரு – ஹைதராபாத் வழித்தடத்தில் மட்டுமன்றி, பெங்கரூளு ஹூப்ளி வழித்தடத்திலும் புதிய வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவது பற்றி அறிவுப்பு வரலாம் என்று ரயில்வே அதிகாரிகள் சொல்கிறார்கள்.