INS Vagir: கடற்படை வலிமையைக் கூட்டும் 5வது கல்வாரி நீர்மூழ்கிக் கப்பல்
கல்வாரி வகையைச் சேர்ந்த 5வது நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் வகிர் திங்கள்கிழமை இந்தியக் கடற்படையில் இணைந்தது.
ஐஎன்எஸ் வகிர் கப்பல் பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்ப பரிமாற்றங்களுடன், இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டது. கடற்படைத் தலைவர் ஆர். ஹரிகுமார் முன்னிலையில் இந்தக் கப்பல் இன்று கடற்படையில் இணைக்கப்பட்டது. வகிர் என்றால் மணல் சுறா என்று அர்த்தம். ரகசியம் மற்றும் அச்சமின்மையைக் குறிக்கக்கூடிய வகையிலேயே கப்பலுக்கு வகிர் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
Launched on May 6, 2019, Vela, the fourth submarine in the series, has commenced her sea trials while the fifth submarine Vagir, which was launched on November 12, 2020, has commenced her harbour sea trials.
The sixth submarine is currently in the advanced stage of outfitting.
MDL CMD VAdm Narayan Prasad (Retd) and Indian Navy's Western Naval Command Chief of Staff Officer (Tech) RAdm B Sivakumar signed the acceptance document in the presence of naval and MDL officials.
கம்பிவழி துண்டப்படும் டோர்பிட்டோக்கள், நீர்பரப்பில் மறைந்திருந்து ஏவக்கூடிய ஏவுகணைகள், உலகின் சிறந்த சென்சார்கள், அதிநவீன ஏவுகணைகள் போன்றவை இந்தக் கப்பலில் உள்ளன. இந்த நீர்மூழ்கிக் கப்பல் 67.5 மீட்டர் நீளமும், 6.2 மீட்டர் அகலமும், 12.3 மீட்டர் உயரமும் கொண்டது. டீசல், மின்சாரம் இரண்டிலும் இயங்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன் சக்தி வாய்ந்த டீசல் எஞ்சினை பயன்படுத்தி பேட்டரிகளை விரைவாக சார்ஜ் செய்யலாம். தொடர்ந்து இரண்டு வாரங்கள்கூட கடலுக்குள் இருக்கும் சக்தி படைத்த இந்தக் கப்பல் 350 மீட்டர் ஆழம் வரை மூழ்கக்கூடியது. கடலுக்கு அடியில் நகரும்போது சப்தம் எழுப்பாத வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
சீனாவைச் சேர்ந்த கப்பல்களின் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடிக்கடி வலம்வரும் அதிகரித்து வரும் நிலையில், ஐஎன்எஸ் வகிர் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது.
தற்சார்பு இந்தியா திட்டத்தில் பிரான்ஸ் நிறுவன தொழில்நுட்ப உதவியுடன் 6 நீர்மூழ்கி கப்பல்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. இந்த நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு கல்வாரி என்று பெயர் வழங்கப்பட்டது. கல்வாரி என்பது மலையாளத்தில் புலிச்சுறாவைக் குறிக்கும் சொல். இதுவரை நான்கு கல்வாரி நீர்மூழ்கிக் கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ள நிலையில் ஐந்தாவது கப்பலாக ஐஎன்எஸ் வகிர் இணைந்துள்ளது. ஆறாவது கப்பல் 2024 மார்ச் மாதம் கடற்படையில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.