மோசமான வானிலையால் வழி மாறி பாகிஸ்தானுக்குள் நுழைந்த இண்டிகோ விமானம்
சனிக்கிழமை இரவு 7.30 மணி அளவில் வடக்கு லாகூர் வான்பகுதிக்குள் நுழைந்த இண்டிகோ விமானம் இரவு 8.01 மணிக்கு இந்திய வான்பகுதிக்குள் திரும்பி வந்தது.
மோசமான வானிலை காரணமாக இண்டிகோ நிறுவன பயணிகள் விமானம் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்து சுமார் அரைமணி நேரம் கழித்து மீண்டும் இந்தியாவுக்குள் வந்தது. சனிக்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சனிக்கிழமை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்குச் சென்ற இண்டிகோ விமானம் (6E-645), மோசமான வானிலை காரணமாக அட்டாரி வழியாக பாகிஸ்தான் வான்பகுதிக்குள் நுழைந்ததுவிட்டது. ஆனால் சிறிது நேரத்திலேயே விமானம் இந்திய வான்பகுதிக்கு திரும்பிவிட்டது என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
கர்ப்பிணி பெண்கள் ராமாயணம் படியுங்கள்! தெலுங்கானா ஆளுநர் தமிழசை அறிவுரை
இண்டிகோ விமானம் வழி மாறியது பற்றி அமிர்தசரஸ் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் பாகிஸ்தான் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தார். பின்னர் விமானம் அகமதாபாத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இரவு 7.30 மணிக்கு வடக்கு லாகூரில் நுழைந்த விமானம் இரவு 8.01 மணிக்கு மீண்டும் இந்திய வான்பகுதிக்கு வந்தது.
"மோசமான வானிலை காரணமாக வான் எல்லையைத் தாண்டுவது சர்வதேச அளவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது அசாதாரண நிகழ்வல்ல" என பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணைய மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா செல்லும் பிரதமர்! நியூ ஜெர்சி உணவகத்தில் 'மோடி ஜி' பெயரில் இந்திய உணவு ரெடி!
எதிர்பாராத விதமாக வானிலை மோசமடையும் சந்தர்ப்பங்களில் இவ்வாறு நேர்வது இயல்புதான் என்றும் இதனால் விமானத்தின் பாதுகாப்புக்கு அபாயம் இருக்காது என்றும் சொல்லப்படுகிறது. கடந்த மே மாதம் 4ஆம் தேதி பாகிஸ்தானில் பலத்த மழை பெய்தபோது ஓமன் தலைநகா் மஸ்கட்டில் இருந்து திரும்பிய பாகிஸ்தான் பிகே 248 விமானம், இந்திய வான்பகுதிக்குள் நுழைந்தது நினைவூகூரத்தக்கது.
மனைவி பெயரில் வாங்கிய சொத்து பினாமி சொத்து அல்ல: உயர் நீதிமன்றம் தீர்ப்பு