Shyam Negi: சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் இமாச்சலில் 106 வயதில் காலமானார்: 34-வது முறை வாக்களித்தார்!
சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் என்ற பெருமை கொண்ட ஷியாம் சரண் நெகி இமாச்சலப்பிரதேசத்தில் கின்னானூரில் அவரின் இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 106.
சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் என்ற பெருமை கொண்ட ஷியாம் சரண் நெகி இமாச்சலப்பிரதேசத்தில் கின்னானூரில் அவரின் இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 106.
இமாச்சலப்பிரதேசத்தில் வரும் 12ம் தேதிநடக்க உள்ள தேர்தலுக்காக, கடந்த 3ம் தேதி ஷியாம் சரண் நெகி தபால் வாக்களித்தார். அப்போது உடல் நலக்குறைவுடனே காணப்பட்டார்.
இந்தியாவின் ட்விட்டர் நிறுவனத்தில் அனைத்து ஊழியர்களும் நீக்கம்: மார்க்கெட்டிங் டீமே காலி!
சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான ஷியாம் சரண் நெகியை தேர்தல் ஆணையம், தங்களின் தூதராக வைத்திருந்தது. 106வயதில் காலமானா ஷியாம் சரண் நெகியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று இமாச்சலப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 1917ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி இமாச்சலப்பிரதேசத்தில் ஷியாம் சரண் நெகி பிறந்தார். அங்குள்ள கல்பா எனும் பகுதியில் பள்ளி ஆசிரியராக ஷியாம் சரண் நெகி பணியாற்றி ஓய்வு பெற்றார். ஆங்கிலேயர்களிடம் இருந்து கடந்த 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்று இந்தியாவில் கடந்த 1951ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடந்தது.
அப்போது அக்டோபர் 25ம் தேதி நாட்டிலேயே வாக்களித்த முதல் வாக்காளர் ஷியாம் சரண் நெகி என்பது சிறப்புக்குரியது. 1952ம் ஆண்டு பி்ப்ரவரியில்தான் வாக்குப்பதிவு நடந்தது, ஆனால், இமாச்சலப்பிரதேசத்தில் கடும் குளிர்காலம் என்பதால், வாக்காளர்கள் வாக்குப்பதிவு மையங்களுக்கு வந்து வாக்களிப்பது சிரமம் என்பதால், 5 மாதங்களுக்கு முன்பே தேர்தல் நடந்தது.
இமாச்சலப்பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் ட்விட்டரில் ஷியாம் நெகி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவரின் இரங்கல் செய்தியில் “ நெகிக்கு உடல் நலக்குறைவு இருந்தபோதிலும்கூட, அதைப் பொருட்படுத்தாமல் சில நாட்களுக்கு முன்புதான் அவரின் ஜனநாயகக் கடமையைச் செய்திருந்தார். சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் நெகி மறைவு எனக்கு வேதனையளிக்கிறது. கடந்த 3ம் தேதி 34வது முறையாக நெகி வாக்களித்திருந்தார்.” எனத் தெரிவித்திருந்தார்.
இந்தியாவின் ட்விட்டர் நிறுவனத்தில் அனைத்து ஊழியர்களும் நீக்கம்: மார்க்கெட்டிங் டீமே காலி!
ஷியாம் சரண் நெகி உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று கின்னணூர் தேர்தல் துணை ஆணையர் அபித் ஹூசைன் சாதிக் தெரிவித்துள்ளார். இறுதிச்சடங்கில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் மாவட்ட அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்றும் மாநில தேர்தல் அதிகாரி மகேஷ் கார்க் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் ட்விட்டரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில் “ஷியாம் சரண் நெகி லட்சக்கணக்கான வாக்காளர்களுக்கு உத்வேகமாக இருந்தவர். அவர் மறைவுக்கு முன்புகூட, இமாச்சலப்பிரதேச தேர்தலுக்கான வாக்கை தபால் மூலம் செலுத்தினார்” எனத் தெரிவித்துள்ளது.
ஷியாம் சரண் நெகியின் குடும்பத்தாருக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் இரங்கல் தெரிவித்துள்ளன
- 105-year-old shyam saran negi
- Shyam Negi dies
- first voter of independent india shyam saran negi
- india first voter shyam saran negi
- shyam negi
- shyam saran
- shyam saran negi
- shyam saran negi age
- shyam saran negi caste
- shyam saran negi died
- shyam saran negi family
- shyam saran negi in 2022
- shyam saran negi in sanam re
- shyam saran negi india first vote
- shyam saran negi kalpa
- shyam saran negi wiki
- shyan saran negi