உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் இந்தியர்கள்தான் தலைமைப் பொறுப்புகளை வகித்து வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்துள்ளார். 

உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் இந்தியர்கள்தான் தலைமைப் பொறுப்புகளை வகித்து வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், உலக நிறுவனங்களால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல தலைமை நிர்வாக அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்கள் சிறந்த தலைமைச் செயல் அதிகாரிகளை உருவாக்கியுள்ளனர். டாப் 500 நிறுவனங்களின் பட்டியலின்படி, அமெரிக்காவைச் சேர்ந்த சிஇஓக்களின் எண்ணிக்கைக்கு அடுத்தபடியாக இந்திய தலைமை நிர்வாக அதிகாரிகளின் எண்ணிக்கை உள்ளது.

இதையும் படிங்க: எங்கள் வீட்டில் சாப்பிட வாருங்கள் என அழைத்த ஆட்டோ ஓட்டுநர்; உடனே ஒப்புக் கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால்!!

58 முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பன்னாட்டு நிறுவனங்களான 11 நிறுவனங்களில் உள்ளனர். இதுபோன்ற சாதனைகள் தொடர வேண்டும். இந்தியா வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உலகம் எதை நோக்கி நகர்கிறது, எந்தத் தொழில்நுட்பம் நோக்கி நகர்கிறது என்பதை பெற்றோர்கள் அறிந்து வருமானத்தில் ஒரு பங்கை சேமித்து வைக்க வேண்டும். 2028 ஆம் ஆண்டில் சீனாவை விட இந்தியாவிலேயே உழைக்கும் மக்கள் அதிகமாக இருப்பார்கள். 2026 ஆம் ஆண்டில் நம் நாட்டில் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை 65 சதவிகிதமாக உருப்பெறும்.

இதையும் படிங்க: சிஏஏ சட்டத்துக்கு எதிராக 220 மனுக்கள்: வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

புதிய கல்விக்கொள்கை உயர்கல்விக்குத் தேவையான பல வாய்ப்புகளை வழங்கியிருக்கிறது. உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் இந்தியர்கள்தான் தலைமைப் பொறுப்புகளை வகித்து வருகின்றனர். மாணவர்கள் மற்ற நிறுவனங்களுக்கு சென்று வேலை செய்வதைவிட தாங்கள் தொழில் முனைவோராக மாறி மற்றவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும். 2047-ல் இந்தியா பொருளாதார அளவில் நல்ல நிலையை வகிக்கும், அதற்கு தேவையானவற்றையை நாம் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.