பல வண்ணங்களை ஒப்பிட்டு பார்த்ததில் ஆரஞ்சு மற்றும் க்ரே வண்ணம் ரயில் பெட்டிகளுக்கு மிக அழகாக பொருந்துவதாகவும் கூறப்படுகிறது.

வந்தே பாரத் ரயில்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது, இந்நிலையில் ஏற்கனவே வெள்ளை மற்றும் நீல நிறத்தில் மின்னி வரும் வந்தே பாரத் ரயில்கள், விரைவில் புது வண்ணத்தை பெற இருக்கிறது. உலக புகழ் பெற்ற சென்னை ICFல், இதற்கான பணிகள் நடந்து வருகின்றது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

சென்னை ICFல் தான் வந்தே பாரத் ரயில் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா முழுமைக்கும் அனுப்பப்படுகிறது. இந்நிலையில் நீலநிறம் மற்றும் வெள்ளை கலந்து ஓடிக்கொண்டிருந்த வந்தே பாரத் ரயில்கள் இனி ஆரஞ்சு மற்றும் க்ரே வண்ணத்தில் உருவாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

பல வண்ணங்களை ஒப்பிட்டு பார்த்ததில் ஆரஞ்சு மற்றும் க்ரே வண்ணம் ரயில் பெட்டிகளுக்கு மிக அழகாக பொருந்துவதாகவும் கூறப்படுகிறது, கிடைத்திருக்கும் தகவலின்படி ஆரஞ்சு வண்ணத்தை ரயிலில் இருபுறமும், கதவுகளுக்கு க்ரே வண்ணம் கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள் : மூளையை உண்ணும் அமீபாவால் கேரள சிறுவன் உயிரிழப்பு..

இந்த நிற மாற்றத்துக்கு குறிப்பிடத்தக்க காரணங்கள் எதுவும் இதுவரை கூறப்படவில்லை என்றாலும் வெள்ளை மற்றும் நீல நிறங்களில் வலம் வரும் வந்தே பாரத் ரயில்களை தூய்மைப்படுத்தும் பணி சற்று சிரமமாக இருப்பதாகவும், அடிக்கடி அழுக்கு படிவதால் இந்த வண்ண மாற்றம் தேவைப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

இதுவரை சுமார் 26 வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் இயக்கப்பட்டு வருகிறது, பல ரயில்வே மண்டலங்களில் இருந்து கருத்துகளைப் பெற்று, தொழிற்சாலையில் பெட்டிகள் மற்றும் அதன் உட்புறங்களை மேம்படுத்தும் பணியும் நடந்து வருகின்றது.

இதையும் படியுங்கள் : ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. 25% வரை கட்டண குறைப்பு..!