பயணிகளை அதிக அளவில் ரயில் சேவைகளை பயன்படுத்த வைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்திய ரயில்வே நிர்வாகம் பல ரயில் சேவைகளின் கட்டணத்தை சுமார் 25 சதவீதம் வரை குறைக்க உள்ளதாக தற்பொழுது தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த கட்டண குறைப்பு வந்தே பாரத் ரயில்கள், பிற ரயில்களில் உள்ள AC Chair Car வகுப்புகள் மற்றும் பிற எக்ஸிகியூடிவ் வகுப்புகளில் செல்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். (ரயிலில் உள்ள பிற வகுப்புகளிலும் 50 சதவிகிதத்திற்கும் குறைவாக பயணிகள் விகிதம் இருந்தால் அங்கும் இந்த தள்ளுபடி செல்லுபடியாகும்)
இந்திய அளவில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலின் 23 ரயில் சேவைகளில், ஒரு சில வழித்தடங்களை மக்கள் 21% முதல் 55 சதவீதம் வரை மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்ற தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. குறிப்பாக இண்டோர் - போபால் இடையிலேயும், ஜபல்பூர் - போபால் இடையிலேயும் மற்றும் மட்கோன் - மும்பை இடையிலேயும் ஓடுகின்ற மூன்று வந்தே ரயில்களில் மிக குறைந்த அளவிலான மக்களே சென்று வருகிறார்கள்.
இதையும் படியுங்கள் : கேசிஆர் தனது குடும்பத்திற்காக மட்டுமே உழைக்கிறார், மற்றவர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை: பிரதமர் மோடி
அதேபோல இந்தியாவின் ஒரு சில வழித்தடங்களில் 50 சதவீதத்திற்கும் குறைவான மக்களே அந்த ரயில்களை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் அந்த நிலையை மாற்றவும், மக்கள் அதிக அளவில் ரயிலை பயன்படுத்தவும் முதல் கட்டமாக 50 சதவீதத்திற்கும் கீழ் பயணிகளின் அளவை கொண்ட வழித்தடங்களில் இந்த கட்டண தள்ளுபடி அமலுக்கு வர உள்ளது. இதை அந்தந்த பகுதி மேலாளர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த 25 சதவீதம் வரையிலான சலுகை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும், ஆனால் ஏற்கனவே இந்த வழித்தடங்களில் புக்கிங் செய்தவர்களுக்கு ரீபண்ட் கொடுக்கப்பட மாட்டாது என்றும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. பயணிகளை அதிக அளவில் ரயில் சேவைகளை பயன்படுத்த வைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஓராண்டு வரை இந்த கட்டண சலுகை வழங்க முடிவு செய்துள்ளதாகவும், TTE-களுக்கும் இந்த கட்டண சலுகையை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் : ஏசி பெட்டிகள் ஏன் ரயிலின் நடுவில் மட்டும் இருக்கின்றன? இதுதான் காரணமா?
