லண்டனை தலைநகரமாக கொண்டு செயல்படும் ஒரு நிறுவனம் தான் Henley Passport Index  என்ற நிறுவனம், இந்த நிறுவனம் கடந்த 2005ம் ஆண்டு முதல், உலகின் 199 நாடுகளின் பாஸ்ப்போர்ட்களை வரிசைப்படுத்தி வருகின்றது (இலவச விசா அடிப்படையில்).

இந்நிலையில், ஹென்லி அண்மையில் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, தரவரிசையில் இந்தியாவின் பாஸ்போர்ட் ஏழு இடங்கள் முன்னேறி, தற்போது 80வது இடத்திற்கு வந்துள்ளது. இதில் கூடுதல் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், இந்தியர்கள் இப்போது 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம், பார்படாஸ், பிஜி, பூட்டான், மாலத்தீவுகள், டோகோ, செனகல் மற்றும் பல நாடுகள், இந்த 57 நாடுகளின் பட்டியலில் உள்ளன. 

சரி இலவச விசா என்றால் என்ன?

பட்டியலில் உள்ள 57 நாடுகளுக்கு பயணிக்கவிரும்பும் இந்திய பாஸ்போர்ட் கொண்ட பயணிகள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட், விமானம் டிக்கெட் மற்றும் தங்குமிட விவரங்களை கொண்டு பயணிக்கலாம். மேலும் இலவச விசா அளிக்கும் நாடுகளில் 1 வாரம் முதல் 90 நாட்கள் வரை தங்க அனுமதி அளிக்கப்படும் (கால அளவு ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடும்).

இன்று முதல் அமலுக்கு வரும் 5 முக்கிய மாற்றங்கள்! சம்பளம் மற்றும் EMI பேமெண்ட்களை பாதிக்கும்!

பயணிகள் கவனிக்கவேண்டியது

இலவச விசா இருந்தபோதிலும், உங்கள் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கு முன், நீங்கள் செல்லும் நாட்டில் உள்ள நுழைவுத் தேவைகளை அறிய வேண்டும். நாட்டிற்குள் நுழைய தேவையான ஆவணங்கள், குறைந்தது 6 மாதம் செல்லுபடியாகும் பாஸ்போர்ட், சரியான அளவிலான புகைப்படங்கள், திரும்ப வருவதற்கான டிக்கெட், தங்குமிட விவரங்கள், வங்கி அறிக்கை (3 மாதங்கள்) மற்றும் கோவிட் 19-க்கான எதிர்மறை சுகாதார சான்றிதழ் உள்ளிட்டவையை நீங்கள் கொண்டுசெல்லவேண்டும்.

பார்படாஸ், இது கரீபியன் தீவுகளில் உள்ள ஒரு அழகிய நாடு, தற்போது இந்தியர்களுக்கு 6 மாத இலவச விசா வழங்குகிறது. மாலத்தீவுகள் 90 நாட்கள், மொரிஷியஸ் 90 நாட்கள், Nieu தீவு 30 நாட்கள், செயின்ட் வின்சென்ட் 30 நாட்கள், செனகல் 90 நாட்கள், கஜகஸ்தான் 14 நாட்கள், பிஜி 12 நாட்கள் மற்றும் பூட்டான் 7 நாட்கள் வரை இந்தியர்களுக்கு இலவச விசா வழங்குகிறது. 

பி.எஃப்.ஐ., அமைப்பின் பயிற்சி மையத்தை கையகப்படுத்திய என்.ஐ.ஏ.,!