அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த வாலிபரை மர்ம கும்பல் துப்பாக்கியால் தாக்கி பணம் மற்றும் காரை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த வாலிபரை மர்ம கும்பல் துப்பாக்கியால் தாக்கி பணம் மற்றும் காரை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் நகரைச் சேர்ந்த வாலிபர் சாய் கிருஷ்ணா. அமெரிக்காவின் லாரன்ஸ் டெக் பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்பை முடித்து அங்குள்ள ஆட்டோமொபைல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
கடந்த 3-ம் தேதி இரவு ஓட்டல் ஒன்றில் உணவு பார்சல் வாங்கிவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு, அவரிடம் இருந்த பர்ஸ், ஐ.டி. கார்டு மற்றும் அவரது காரை எடுத்துக் கொண்டு தப்பினர். குண்டு காயத்துடன் படுகாயமடைந்த சாய் கிருஷ்ணா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சாய் கிருஷ்ணாவை பெற்றோர் தற்போது அமெரிக்கா சென்று அவரை பார்க்க விரும்புகின்றனர். இது தொடர்பாக தெலங்கானா அரசின் உதவியை நாடியுள்ளனர். கடந்த சில வருடங்களாக அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் தலை தூக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 8, 2019, 3:44 PM IST