BREAKING இந்தியாவில் இருந்து மாஸ்கோ சென்ற பயணிகள் விமானம் ஆப்கனில் விபத்து!
இந்தியாவில் இருந்து மாஸ்கோ சென்ற பயணிகள் விமானம் ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது
இந்தியாவில் இருந்து ரஷ்யா தலைநகர் மாஸ்கோ சென்ற பயணிகள் விமானம் ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் உள்ள பதக்ஷான் மாகாணத்தில் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பதக்ஷான் மாகாணத்தின் சிபக் மாவட்டத்தில் உள்ள மலையில் மோதி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் எத்தனை பேர் பயணித்தார்கள், அவர்களின் நிலை குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
இந்த சம்பவத்தை பதக்ஷான் மாகாணத்தில் உள்ள உள்ள தலிபான்களின் தகவல் மற்றும் கலாச்சாரத் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார். மாகாணத்தில் உள்ள கரன், மஞ்சன் மற்றும் ஜிபாக் மாவட்டங்களை உள்ளடக்கிய டோப்கானே மலையில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதாக அவர் கூறியுள்ளார்.
சம்பவம் குறித்து விசாரணை நடத்த குழுவொன்று அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தற்போதைய நிலவரப்படி, உயிரிழப்புகள் அல்லது விபத்துக்கான காரணம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு: அரைநாள் விடுப்பை திரும்பப் பெற்ற டெல்லி எய்ம்ஸ்!
இதனிடையே, இந்திய அரசால் திட்டமிடப்பட்டு இயக்கப்படும் அனைத்து விமானங்களும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது. எனவே, விபத்துக்குள்ளான விமானம் வாடகை விமானமாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. அதேசமயம், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.