அன்னபூர்ணா மலையில் மாயமான இந்தியர் மீட்பு; உடல்நிலை கவலைக்கிடம்!
நேபாளத்தின் அன்னபூர்ணா மலையில் 6000 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்து காணாமல்போன இந்தியர் அனுராக் மாலூ வியாழக்கிழமை ஷெர்பா குழுவினரால் மீட்கப்பட்டார்.
கடந்த வாரம் நேபாளத்தின் அன்னபூர்ணா மலையிலிருந்து இறங்கும்போது காணாமல் போன இந்திய மலையேற்ற வீரர் அனுராக் மாலூ உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. "அவர் உயிருடன் மீட்கப்பட்டார். ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார்" என அவரது சகோதரர் சுதிர் கூறினார்.
34 வயதான அனுராக் மாலூ கடந்த வாரம் நேபாளத்தில் உள்ள அன்னபூர்ணா மலையில் மலையேற்றத்துக்குச் சென்றார். ஆனால் ஏப்ரல் 17ஆம் தேதி மலையில் இருந்து கீழே இறங்கும்போது 6,000 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். அன்னபூர்ணா மலை, கடல் மட்டத்திலிருந்து 8,091 மீட்டர் உயரத்தில் உள்ளது.
அன்றே சொன்னார் புத்தர்! முதல் பௌத்த மாநாட்டைத் தொடங்கிவைத்து பேசிய பிரதமர் மோடி
அன்னபூர்ணா மலை உலகின் பத்தாவது உயரமான மலையாகக் கருதப்படுகிறது. இந்த மலையின் K2 மற்றும் நங்கா ஆகிய சிகரங்கள் இரண்டும் ஏறுவதற்குக் மிகவும் கடினமான சிகரங்களாகக் கருதப்படுகின்றன. அனுராக் மாலூ கீழே இறங்கியபோது ஒரு பிளவில் விழுந்து கிடந்ததை மீட்புப் படையினர் கண்டுபிடித்தனர்.
சாங் தாவா தலைமையிலான ஆறு ஷெர்பா மலையேறிகள் குழு தேடும் பணியை மேற்கொண்டது. வியாழக்கிழமை காலை சுமார் 300 மீட்டர் ஆழமான பள்ளத்தில் அனுராக் மாலூவை கண்டுபிடித்ததாக செவன் சம்மிட் மலையேற்ற நிறுவனத்தின் தலைவர் மிங்மா ஷெர்பா தெரிவித்தார். “அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. டாக்டர்கள் அவரை கவனித்து வருகின்றனர்” என்று செவன் சம்மிட் நிறுவனத்தின் பொது மேலாளர் தானேஸ்வர் குராகேன் கூறுகிறார்.
ராகுல் மீதான அவதூறு வழக்கு தீர்ப்புக்கு தடை விதிக்கப்படுமா? சூரத் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு
மாலூ, ஐ.நா.வின் உலகளாவிய இலக்குகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக, உலகில் 8,000 மீட்டருக்கு மேல் உள்ள 14 சிகரங்களையும், ஏழு கண்டங்களில் உள்ள ஏழு உயரமான உச்சிகளையும் எட்டுவதற்கான பயணத்தில் ஈடுபட்டவர். இவர் ஏற்கெனவே ரெக்ஸ் கரம்-வீர் சக்ரா விருது பெற்றிருக்கிறார். இந்தியாவின் அண்டார்டிக் இளைஞர் தூதுவராகவும் அறிவிக்கப்பட்டவர்.
பல்ஜீத் கவுர் என்ற மற்றொரு இந்தியப் பெண்ணும் அன்னபூர்ணா மலையில் இருந்து வியாழக்கிழமை மீட்கப்பட்டார். 27 வயதான அந்தப் பெண் அன்னபூர்ணா மலையில் உள்ள நான்காவது முகாம் அருகே காணாமல் போனார். 7,363 மீட்டர் உயரத்தில் இருந்து மீட்கப்பட்ட அவர், உறைபனியால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் சொல்கின்றனர்.
டெல்லியில் 2வது ஆப்பிள் ஸ்டோர் திறப்பு! அதிகாலையிலேயே திரண்ட ஐபோன் ரசிகர்கள்!