பஹல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இந்திய ராஃபேல் விமானம் வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் தரப்பு வதந்தி பரப்பியது.

 பஹல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய நிலையில், இந்திய ராஃபேல் விமானம் வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியது. பஹல்வால்பூர் அருகே இந்திய விமானம் வீழ்த்தப்பட்டதாகவும், அதன் புகைப்படம்/காணொளி எனவும் பகிரப்பட்டது. ஆனால், அது பழைய விமான விபத்தின் புகைப்படம்/காணொளி என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வதந்தி

'பஹல்வால்பூர் அருகே இந்திய ராஃபேல் விமானம் வீழ்த்தப்பட்டது' என்ற தலைப்பில் எக்ஸ் தளத்தில் புகைப்படம்/காணொளி பகிரப்பட்டது.

உண்மை

பழைய விமான விபத்தின் புகைப்படம்/காணொளி தான் இது என மத்திய செய்தி மையம் தெரிவித்துள்ளது. டிடி நியூஸ் 2024 செப்டம்பர் 2-ல் வெளியிட்ட செய்தியில், பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதாகவும், விமானி உயிர் தப்பியதாகவும் கூறப்பட்டுள்ளது.

மத்திய செய்தி மையத்தின் பதிவு:

Scroll to load tweet…

முடிவு

இந்திய விமானம் வீழ்த்தப்பட்டது என்பது வதந்தி. பழைய விமான விபத்தின் புகைப்படம்/காணொளி தான் பகிரப்படுகிறது.