சவால்களை எதிர்கொண்டு இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது: பிரதமர் மோடி பெருமிதம்!!
வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இன்று இந்தியப் பொருளாதாரம் இருக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜனநாயக மாநாடு 2023 என்ற தலைப்பிலான கூட்டத்தில் பங்கேற்று காணொளி வாயிலாக பிரதமர் மோடி இன்று பேசினார். அப்போது, ''உலக சவால்களை எதிர்கொண்டு இன்று வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா இருக்கிறது. ஜனநாயகம் என்பது ஒரு கட்டமைப்பு மட்டுமில்லை, அது ஒரு உத்வேகத்தை அளிக்கக் கூடியது. இந்தியா ஜனநாயகத்தில் இன்று உலக நாடுகளுக்கு ஒரு உதாரணமாக, விளம்பரமாக விளங்குகிறது. ஜனநாயக நாட்டில் எதையும் சாதிக்க முடியும் என்பதை இந்தியா உலகிற்கே எடுத்துக் காட்டுகிறது.
இந்தியாவின் தாரக மந்திரமே அனைவரும் இணைந்து அனைவருக்குமாக என்பதுதான். ஜனநாயகத்தின் தாய் இந்தியா. தேவைகள் மற்றும் எண்ணங்கள் அனைவருக்கும் சமமான முக்கியத்துவத்தை பெற்றது என்பதை இந்த ஜனநாயக கட்டமைப்பு விளக்குகிறது.
கைகொடுக்க வந்த கார்த்தி சிதம்பரம்... கண்டுகொள்ளாத ராகுல்! காரணம் இதுதான்!!
வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது, விநியோகிக்கப்பட்ட தண்ணீரை சேமிப்பது, பாதுகாப்பது, அனைவருக்கும் சுத்தமான, சமையல் எரிபொருளை வழங்குவது ஆகிய ஒவ்வொரு முயற்சியும் இந்திய குடிமக்களின் கூட்டு முயற்சிகளால் இயக்கப்படுகிறது.
நமது மகாபாரதத்திலும் மக்களின் முதல் கடமை தங்களது தலைவர்களை தேர்வு செய்வதுதான் என்று கூறப்பட்டுள்ளது. நம்முடைய வேதங்கள் அரசியல் அதிகாரங்கள் குறித்துப் பேசுகின்றன. வேத காலத்திலேயே தலைவர் தேர்வுக்கான ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. பண்டைய இந்தியாவில் ஆட்சியாளர்கள் பரம்பரையாக தேர்வு செய்யப்படவில்லை என்பதை வரலாற்று சான்றுகள் காட்டுகின்றன.
கொரோனா தொற்று நோய் காலத்தில் மத்திய அரசு மில்லியன் தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தியுள்ளது. ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் என்ற அடிப்படையில் வழி நடத்திச் செல்லப்படுகிறது'' என்றார்.
இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கோஸ்டாரிகா அதிபர் ரோட்ரிகோசாவேஸ் ராபெல்ஸ், ஜமீபியா அதிபர் ஹகைண்டே ஹிசிலிமா, நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே, தென்கொரியா அதிபர் யூன் சுக் யால் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்