முக்கிய வி.வி.ஐ.பி.களுக்கு பாதுகாப்பு அளிக்கும் தேசிய பாதுகாப்பு பிரிவின் தலைமை அலுவலகத்தின் இணையதளத்தை (www.nsg.gov.in)பாகிஸ்தானைச் சேர்ந்த மர்மநபர்கள் ஹேக்கிங் செய்தனர். அதில் பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பதிவு செய்தனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “ பிரதமர், குடியரசுதலைவர், உள்ளிட்ட முக்கிய வி.வி.ஐ.பி.களின் பாதுகாப்பில் ஈடுபடும் என்.எஸ்.ஜி எனப்படும்கமாண்டோ படைப்பிரிவின் இணையதளத்தை சிலர் நேற்று ஹேக் செய்துள்ளனர். இது நேற்று காலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பிரதமர் மோடி குறித்த அவதூறான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தன.
அதன்பின், அரசின் மென்பொருள் வல்லுநர்கள் அதை சரி செய்தனர். இந்த தளத்தை ஹேக்கிங் செய்தவர்கள் அலோன் இன்ஜெக்டர் என்ற பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்களாக இருக்கலாம். ஆனால், முழுமையான விவரங்களை சேகரித்து வருகிறோம்'' எனத் தெரிவித்தனர்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 19, 2018, 2:55 AM IST