Asianet News TamilAsianet News Tamil

இதுதான் மனிதநேயமா…? – இந்தியன் வங்கியில் மயங்கி விழுந்தவர் பலி... வீடியோ எடுத்த பொதுமக்கள்

indian bank-old-man-dead
Author
First Published Dec 4, 2016, 11:45 AM IST


இந்தியன் வங்கியில் பணம் எடுக்க வந்த முதியவர் திடீரென மயங்கி விழுந்து பலியானார்.

கடந்த 8ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதைதொடர்ந்து கையில் இருப்பு உள்ள பணத்தை அனைத்து வங்கியிலும் செலுத்தி மாற்றி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தினமும் ஏராளமான மக்கள் வங்கியின் வாசலில் காலை முதல் மாலை வரை கால் கடுக்க காத்திருக்கின்றனர்.

indian bank-old-man-dead

இந்நிலையில், பாபநாசம் இந்தியன் வங்கியில் ஏராளமானோர் அதிகாலை முதல், பணம் பெறுவதற்காக காத்திருந்தனர். அப்போது, பாபநாசம் பகுதியை சேர்ந்த முதியவர் சுப்பிரமணியன்ம என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்ததும், அங்கு வரிசையில் நின்றிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மனிதாபிமானம் இல்லாத சிலர், அவர் மயங்கி விழுந்ததை தங்களது செல்போன் மூலம் வீடியோ எடுத்தனர்.

ஆனால், அதிலும் கொடுமையான விஷயம், வங்கி ஊழியர்கள் யாரும், அவரை மீட்கவோ, தண்ணீர் கொடுத்து விசாரிக்கவோ செய்யவில்லை.

பின்னர், அங்கிருந்த சிலர், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சுப்பிரமணியம் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

மோடியின் டிஜிட்டல் இந்தியா இதுதானா..? ஒருவர் மயங்கி விழுந்தும் அவரை கவனிக்காமல் புறக்கணிப்பதுதான் மனிதநேயமா…?

Follow Us:
Download App:
  • android
  • ios