கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க சீனா 10 நாட்களில் ஆயிரம் படுக்கை அறைகளைக் கொண்ட  மருத்துவமனையை உருவாக்கியதை உலகமே வியந்து பாராட்டிய நிலையில் ,  இந்திய ராணுவத்தினர் சில மணி நேரங்களிலேயே  ஆயிரம் படுக்கை வசதிகளை  கொண்ட மருத்துவமனையை  அமைத்து சாதனை படைத்துள்ளனர்.    சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் வுகானில்  தோன்றிய கொரோனா  வைரஸ் அந்நாட்டை கபளீகரம் செய்தது என்றே சொல்லலாம் . கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய  இந்த வைரஸ் சீனாவில் மெல்லமெல்ல பரவி ஒரு கட்டத்தில் சீனா வையே கதிகலங்க வைத்தது .  அப்போது சீனா அரசு இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க சுமார் 25 ஆயிரம் சதுர மீட்டரில் 10 நாட்களுக்குள் ஆயிரம்  படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனையை அமைத்தது .

 சீனாவின் இந்த அதிரடி நடவடிக்கையை உலகமே வியந்து பாராட்டியது , வெறும் 10 நாட்களுக்குள் ஆயிரம் படுக்கை வசதியில் கொண்ட மருத்துவமனையா.?  இது சீனாவில் மட்டும் தான் சாத்தியம்,  இந்தியாவில் இது போன்ற ஒரு செயலை  கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாது என பலர் வாயடைத்து நின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுற்றி இந்தியாவிற்குள்ளும் இப்போது  நுழைந்துள்ளது.  தற்போது இந்தியாவில் மெல்ல மெல்ல வேகம் எடுக்கவும் தொடங்கியுள்ளது .  இதுவரையில் 700 பேரை அது தாக்கியுள்ளது ,  சுமார் 18 பேரை அதற்கு உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில் சிகிச்சைக்கு பாதிக்கப்படும் மக்களுக்கு சிகிச்சை வழங்க இந்தியா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.   21 நாள் தேசிய ஊரடங்கு உத்தரவு என மத்திய அரசு அறிவித்துள்ளது .  இந்நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்தியாவில் கொரோனாவால்  பாதிக்க வாய்ப்புள்ளது என அனுமானிக்கப்பட்டுள்ளது. 

இந் நிலையில் மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த இந்தியா போர்கால நடவடிக்கையில் செயல்பட்டு வருகிறது ,  வெண்டிலேட்டர்கள் , சிகிச்சைக்கு தேவையான  மருந்து மாத்திரைகள் போன்றவற்றில் அதிதீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது.  இந்நிலையில் சீனாவை எல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள பார்மர் என்ற ராணுவ முகாமில் இந்திய ராணுவ வீரர்கள் சில மணி நேரங்களிலேயே சுமார் ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.  போர்க்காலங்களில் ராணுவத்திற்கு தரப்படும்  உபகரணங்களைக் கொண்டு அவர்கள் மிக நேர்த்தியான இந்த மருத்துவமனைகளை உருவாக்கியுள்ளனர். இவை அனைத்து படுக்கை வசதிகளும் கொண்ட படுக்கை அறைகளை உருவாக்கப்பட்டுள்ளது.  இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கை  ஒட்டுமொத்த உலகையும் வியப்படைய செய்துள்ளது.   அதுமட்டுமின்றி இந்திய ராணுவத்தின் அபார திறமையையும் ,  நாட்டிற்கு ஒரு பிரச்சினை என்றால் ராணுவம் எப்படி செயல்படும் என்பதையும் இது உலகிற்கு உணர்த்துவதாக உள்ளது .