அடிக்கடி விபத்துக்குள்ளாகும் பழைய MiG-21 ரக போர் விமானங்களை பயன்பாட்டில் இருந்து நிறுத்தி வைக்க இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது.
இந்திய விமானப்படையின் MiG-21 போர் விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அந்த ரகத்தைச் சேர்ந்த அனைத்து விமானங்களையும் இயக்காமல் நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற விபத்துக்குக் காரணம் என்ன என்பதைக் கண்டறியும் சோதனைகள் மேற்கொள்ளப்படும் நிலையில் இந்திய விமானப்படை இதனைத் தெரிவித்துள்ளது.
கடந்த மே 8ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் சூரத்கரில் இருந்து விமானம் புறப்பட்டுச் சென்றபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த விமானம் ஹனுமன்கர் அருகே சென்றபோது டப்லி கிராமப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் குறைந்து 2 பெண்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுந்து நொறுங்கிய போர் விமானம் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்குள்ளானது. விமானி சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்தாரல். அடுத்து, விபத்துக்கான காரணத்தை ஆராயும் விசாரணை தொடங்கப்பட்டது. இந்த விபத்துக்கான காரணங்கள் கண்டறியப்படும் வரை MiG-21 விமானங்கள் அனைத்தும் தரையிறக்கப்பட்டு நிறுத்திவைக்கப்படும் என மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த MiG-21 ரக விமானங்கள் 50 ஆண்டுகளாக இந்திய விமானப்படையில் உள்ளன. அவற்றை படிப்படியாக நீக்கப்படும் பணி நடைபெற்று வருகிறது. MiG-21 விமானங்கள் அனைத்தும் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திற்குள் படிப்படியாக அகற்றப்படும் என்றும் விமானப்படை அதிகாரிகள் சொல்கின்றனர்.
மாநில கல்விக் கொள்கை குழுவில் 2 புதிய உறுப்பினர்கள் நியமனம்: அமைச்சர் மகேஷ் அறிவிப்பு

சென்ற ஜனவரி மாதம், ராஜஸ்தானின் பரத்பூரில் பயிற்சியின்போது இந்திய விமானப்படையின் இரண்டு போர் விமானங்கள் (Sukhoi Su-30 மற்றும் a Mirage 2000) விபத்துக்குள்ளானதில் ஒரு விமானி உயிரிழந்தார். ஒரு விமானம் மத்தியப் பிரதேசத்தின் மொரேனாவில் விழுந்து நொறுங்கிய நிலையில், மற்றொன்று ராஜஸ்தானின் பரத்பூரில் விழுந்து நொறுங்கியது.
மே 4ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. அதில் விமானி, துணி விமானிகள் உள்ளிட்ட 3 பேர் காயங்களுடன் தப்பினர். மற்றொரு விபத்து ஏப்ரல் மாதம் கொச்சியில் நடந்தது. கடலோர காவல்படை ஹெலிகாப்டர் தரையிறங்கியபோது விபத்து நேர்ந்தது. மார்ச் மாதம் மும்பையில் ஒரு கடற்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இரண்டு சம்பவங்கள் நடந்தன. அக்டோபர் 5, 2022 இல், அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதிக்கு அருகே சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இந்திய ராணுவ விமானி ஒருவர் உயிரிழந்தார்.
ஏன் இந்த முறையும் கந்தீரவா மைதானத்தில் பதவியேற்றுக் கொண்டார் சித்தராமையா? இதுதான் ரகசியம்!
