Asianet News TamilAsianet News Tamil

2019-2020-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள சிறப்பம்சங்கள்...

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி 2019-2020-ஆம் ஆண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. எனினும் கடந்த பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சராக இருந்த பியூஷ் கோயல் தாக்கல் செய்திருந்தார். இதில் பல அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

india union Budget 2019 - 2020 LIVE Updates
Author
Delhi, First Published Jul 5, 2019, 12:35 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி 2019-2020-ஆம் ஆண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. எனினும் கடந்த பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சராக இருந்த பியூஷ் கோயல் தாக்கல் செய்திருந்தார். இதில் பல அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில் மக்களவை தேர்தல் நடந்து முடிந்து பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு பதவியேற்றது. இந்த அமைச்சரவையில்  நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராக பதவியேற்றார். 

இந்நிலையில், கடந்த 1 மாதமாக முழு பட்ஜெட் தாயாரித்து, பட்ஜெட்டுக்கு முன்பே தாக்கல் செய்யப்படும் பொருளாதார ஆய்வறிக்கையை நேற்றே நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். சூட்கேஸுக்கு பதிலாக சிவப்பு நிற பையில் முடிச்சுடன்  பட்ஜெட் ஆவணங்களை கொண்டு வந்தார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையை தொடங்கி வைத்த நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 

பாஜக கூட்டணி தொடர்ந்து இரண்டாவது முறையாக பொதுத்தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்து  உரையை ஆரம்பித்த அவர் ;  கங்கை ஆற்றில் நடைபெறும் படகு போக்குவரத்தை நான்கு மடங்கு அதிகரிக்க திட்டம், பேட்டரி வகை வாகனங்களை உற்பத்தி செய்ய நிறுவனங்களை மத்திய அரசு ஊக்குவிக்கும்.

பிரதான் மந்திரி கிராமீன் டிஜிட்டல் சக்ஸ்ரதா அபியான் திட்டத்தின்கீழ்,பாரத் நெட்  என்ற பெயரில், நாட்டின் ஒவ்வொரு பஞ்சாயத்திலும், இன்டெர்நெட் இணைப்பை இலக்காகக் கொண்டுள்ளோம்.

*நாடு முழுவதும் சுமார் 5.6 கோடி நகரங்கள் திறந்த வெளி கழிப்பிடங்கள் இல்லாத நகரமாக மாறியுள்ளது. 

*என்ஷைலோ பீடியா திட்டம் (encylo pidia) போன்று "காந்தி பீடியா" திட்டம் தொடங்கப்பட்டு நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் கொள்கைகளை இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்படும்.  

*புதிய கல்வி கொள்கை கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.  சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பசுமை வழி சாலைகள் திட்டம் செயல்படுத்தப்படும். 

*தண்ணீர் பற்றாக்குறை குறையை போக்குவதே மத்திய அரசின் நோக்கம். அனைத்து கிராமங்களுக்கும் 2024- ஆம் ஆண்டிற்குள் அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் மற்றும் குடிநீர் குழாய்கள் இருக்கும். 

*தூய்மை இந்தியா திட்டத்திற்க்கான செயலியை சுமார் "ஒரு கோடி" பேர் பதிவிறக்கம் செய்துள்ளன. நாடு முழுவதும் சுமார் 95% நகரங்கள் திறந்த வெளி கழிப்பிடங்கள் இல்லாத நகரங்களாக மாறியுள்ளது.

*வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், நம் நாட்டில் அதிக அளவில் முதலீடு செய்ய நடவடிக்கை மற்றும் வணிகம், விமான போக்குவரத்து துறையில் அந்நிய முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

*வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு புதிய சீர்த்திருத்தம் கொண்டு வரப்படும். பிரதம மந்திரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் சுமார் 1.9 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்படும்.

*புதிய தொழில்கள் துவங்குவோருக்காகவே தனி சாட்டிலைட் டிவி சேனல் துவங்கப்படும். இதில் தொழில் துவங்குவது, வரி உள்ளிட்ட பல விஷயங்கள் காண்பிக்கப்படும். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலமாகவே இந்த சேனல் நிகழ்ச்சிகள் தொகுக்கப்படும்

*2019 - 20 நிதி ஆண்டுக்குள், 100 குழுக்கள் அமைக்கப்பட்டு இந்திய மூங்கில், தேன் காதி பொருட்கள் அனைத்தும் புரொமோட் செய்யப்படும். அதோடு இந்த 100 குழுக்கள் தனியார் நிறுவனங்கள், இந்திய விவசாயத் துறையில் முதலீடு செய்வதையும் ஊக்குவிக்கும்.

*2024 ஆம் ஆண்டிற்குள் ஊரகப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்க இலக்கு, இதற்காக, ஹர் கர் ஜல் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது

*Pradhan Mantri Karam Yogi Man Dhan Scheme திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 1.5 கோடி ரூபாய் டேர்ன் ஓவர் பார்க்கும் 3 கோடி வியாபாரிகளுக்கு 350 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, ஓய்வூதியம் கொடுக்கப் போகிறோம்.

*பாரம்பரிய தொழில்களை அதிக கிராம மக்கள் மேற்கொண்டு வருவதால், அதை மேம்படுத்த, நாடு முழுக்க, காதி, தேன், மூங்கில் கிளஸ்டர்கள் அமைக்கப்படும். 

*2019-20ம் ஆண்டில், 100 கிளஸ்டர்கள் நாடு முழுக்க அமைக்கப்படும். 1,25,000 கிலோ மீட்டர் தூர சாலைகள் மேம்படுத்தப்படும். இதற்காக ரூ.80,250 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது 

*1.95 கோடி வீடுகள் 2022ம் ஆண்டுக்குள் ஏழைகளுக்கு வழங்கப்படும். இதன் மூலம், வீடற்றவர்கள் இல்லாத நிலை உருவாக்கப்படும்.

*2022 ஆம் ஆண்டிற்குள் 1.90 கோடி வீடுகளில் மக்கள் குடியேறுவார்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது. சாகர் மாலா மற்றும் பாரத் மாலா திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். 

* 5 ஆண்டுகளில் ரூபாய் 80,250 கோடியில் 1,25,000 கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கப்படும். 50 ஆயிரம் கைவினை கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர நடவடிக்கை. 75 ஆயிரம் தொழில் முனைவோருக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படும்.

* 3 கோடி சில்லரை வணிகர்கள், கடை உரிமையாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் விரிவுபடுத்தப்படும். 

*ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்குள் வர்த்தகம் செய்யும் வணிகர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும். ஆதார் மற்றும் வங்கி கணக்கு மட்டுமே இதற்கு போதுமானது. இந்த திட்டத்திற்கு பிரதான் மந்த்ரி கரம் யோகி மான் தன் யோஜனா என பெயரிடப்பட்டுள்ளது. 

*பரத்மாலா திட்டம், சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளை உருவாக்க உதவும், சாகர்மாலா துறைமுக இணைப்பை மேம்படுத்தும் என்பது போன்ற பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios