Asianet News TamilAsianet News Tamil

எல்லாம் கையை மீறி போச்சு.. கொரோனா பாதிப்பு புதிய உச்சம்.. அலறும் இந்தியா.. மிரளும் மக்கள்..!

இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 28,637 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,49,553ஆக உயர்ந்துள்ளது. 

India sees biggest one-day jump of 28,637 Covid-19
Author
Maharashtra, First Published Jul 12, 2020, 11:05 AM IST

இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 28,637 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  8,49,553ஆக உயர்ந்துள்ளது. 

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- கடந்த 24 மணி நேரத்தில் 28,637 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 8,49,533ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 5,34,620 பேர் குணமடைந்துள்ளனர். 2,92,258 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 22,674 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 2,80,151 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

India sees biggest one-day jump of 28,637 Covid-19

இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா மொத்த எண்ணிக்கை 8,49,533ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 5,34,620 பேர் குணமடைந்துள்ளனர். 2,92,258 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 22,674 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 2,80,151 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

India sees biggest one-day jump of 28,637 Covid-19

அதேபோல், 2வது இடத்தில் உள்ள தமிழகத்தில் 1,34,226 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.1,898 பேர் உயிரிழந்துள்ளனர்.3வது இடத்தில் உள்ள டெல்லியில் 1,10,921 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,334 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 40,941, ராஜஸ்தானில் 23,748, மத்திய பிரதேசத்தில் 17,201, உத்தரப்பிரதேசத்தில் 35,092, ஆந்திராவில் 27,235, தெலங்கானாவில் 33,402, கர்நாடகாவில் 36,216, கேரளாவில் 7,438 புதுச்சேரியில் 1,337 பேருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios