பாகிஸ்தான் எல்லையில் இந்தியாவில் ஏவுகனை விழுந்ததற்கு அந்நாடு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் பராமரிப்பு பணியின் போது தவறுதலாக ஏவப்பட்ட ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டதோடு இந்த சம்பவத்திற்கு இந்தியா வருத்தம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் எல்லையில் இந்தியாவில் ஏவுகனை விழுந்ததற்கு அந்நாடு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் பராமரிப்பு பணியின் போது தவறுதலாக ஏவப்பட்ட ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டதோடு இந்த சம்பவத்திற்கு இந்தியா வருத்தம் தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு ரஷ்யாவுக்கு இடையே கடந்த 10 நாட்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. போரை நிறுத்த உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கு இடையே மூன்று கட்ட பேச்சுவார்தை நடந்தும் அதில் உடன்பாடு எட்டப்படாததால் ரஷ்யா தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் சூப்பர் சோனிக் ஏவுகணை ஒன்று கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்துள்ளதாக பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து பேசிய பாகிஸ்தான் விமானப்படை மேஜர் ஜெனரல் பாபர் இஃப்திகார், கடந்த 9 ஆம் தேதி மாலை 6.50 மணிக்கு இந்தியாவில் ஹிரியானா மாநிலம் சிறுசா நகரத்தில் இருந்து ஏவப்பட்ட அதிவேக ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மியா சானு என்ற பகுதியில் விழுந்திருப்பதாவும், பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட ஆய்வில் அது சூப்பர் சோனிக் வகை ஏவுகணை என்று தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த ஏவுகணை விழுந்ததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும், தனியார் சொத்துக்கள் சில சேதமாகியுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் பாகிஸ்தானில் விழுந்த ஏவுகணையின் பாகங்களை பறிமுதல் செய்து சோதனை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சக்ம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், கடந்த மார்ச் 9 ஆம் தேதி பராமரிப்பு பணியின் போது தவறுதலாக ஏவப்பட்ட ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் உயிர்தேசம் ஏற்படவில்லை என்றும், உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இடையேயான 2005 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் படி, ஏவுகணை சோதனையில் ஈடுபடுவதற்கு குறைந்தது 3 நாட்களுக்கு முன்னர் ஏவுகணை குறித்த முழு தகவல்களையும் பரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை அழைத்து இந்த அத்துமீறலுக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுபோன்ற அலட்சியத்தால் ஏற்படும் அசம்பாவிதங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற மீறல்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் இந்தியாவிடம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையே எல்லை பிரச்னை தொடர்ந்து இருந்துவரும் நிலையில், ஹரியானாவின் சிர்சாவிலிருந்து வந்த ஏவுகணை பாகிஸ்தானின் மியான் சன்னு நகரின் அருகே விழுந்தது பாகிஸ்தான் ராணுவத்தால் கண்டறியப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் பங்கேற்குமாறு பாகிஸ்தான் இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
