இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறப்போகிறது என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வியாழக்கிழமை தெரிவித்தார்.
அரசாங்கத்தின் முயற்சிகளால், இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறப்போகிறது என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வியாழக்கிழமை தெரிவித்தார். இந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். குதிரை வண்டியில் நாடாளுமன்றத்திற்கு வந்த முர்மு, தேசிய கீதத்தைத் தொடர்ந்து தனது உரையைத் தொடங்கினார்.
அப்போது பேசிய அவர் "இரண்டு மாதங்களுக்கு முன்பு, நமது அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட 75 ஆண்டுகளைக் கொண்டாடினோம், சில நாட்களுக்கு முன்பு, 75 ஆண்டுகளின் பயணத்தை நிறைவு செய்தோம்... அனைத்து இந்தியர்களின் சார்பாகவும், பாபாசாகேப் அம்பேத்கருக்கும், அரசியலமைப்பு குமிட்டியில் உள்ள அனைவருக்கும் நான் தலை வணங்குகிறேன்," என்று கூறினார்.
பட்ஜெட் 2025: நேரடி வரி விதிப்பை அறிமுகப்படுத்தும் மத்திய அரசு? என்ன மாற்றம் இருக்கும்?
தனது உரையில் பாபாசாகேப் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்திய குடியரசு தலைவர். "பாபாசாகேப் அம்பேத்கருக்கும், அரசியலமைப்பை உருவாக்கிய அனைவருக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன்." என்று கூறினார்.
உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த அவர், "வரலாற்றுச் சிறப்புமிக்க மகா கும்பமேளாவும் நாட்டில் நடைபெற்று வருகிறது. மகா கும்பமேளா என்பது இந்தியாவின் கலாச்சார அடையாளம் மற்றும் சமூக விழிப்புணர்வின் திருவிழா. கோடிக்கணக்கான பக்தர்கள் ஏற்கனவே மகா கும்பமேளாவில் புனித நீராடி உள்ளனர். மௌனி அமாவாசையன்று நடந்த சம்பவம் குறித்து நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்." என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு காலமான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும் குடியரசு தலைவர் நினைவு கூர்ந்தார். அப்போது "சில நாட்களுக்கு முன்பு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை இழந்தோம். அவர் பத்து ஆண்டுகள் பிரதமராக நாட்டுக்கு சேவை செய்தார், நீண்ட காலமாக நாடாளுமன்றத்தின் ஒரு அங்கமாகவும் இருந்தார். டாக்டர் சிங்கிற்கு நான் மரியாதை செலுத்துகிறேன்," என்று கூறினார்.
2025 பட்ஜெட்: பணவீக்கத்தை எதிர்கொள்ள நிர்மலா சீதாராமன் போடும் திட்டங்கள் என்ன?
மேலும் "இன்று நாடு பெரிய முடிவுகள் விரைவாக எடுக்கப்படுவதைக் காண்கிறது. இந்த முடிவுகளில், பெண்கள், இளைஞர்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் விவசாயிகள் முதன்மையான கவனத்தைப் பெறுகிறார்கள். பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா மூலம் வீடுகளை வழங்க எனது அரசு வலுவான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மேலும் 3 கோடி வீடுகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. "நடுத்தர வர்க்கத்தினரின் சொந்த வீடு என்ற கனவை நிறைவேற்ற எனது அரசு உறுதி பூண்டுள்ளது," என்று குடியரசுத் தலைவர் கூறினார்.
"ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆறு கோடி மூத்த குடிமக்களுக்கு சுகாதார காப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் சுகாதாரக் காப்பீடு கிடைக்கும்," என்று அவர் மேலும் கூறினார்.
குடியரசுத் தலைவரின் உரைக்குப் பிறகு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறையின் பொருளாதாரப் பிரிவால் தயாரிக்கப்பட்டு, தலைமைப் பொருளாதார ஆலோசகரின் மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை, 2024-25 (ஏப்ரல்-மார்ச்) ஆம் ஆண்டின் பொருளாதார நிலை மற்றும் பல்வேறு குறிகாட்டிகள் மற்றும் அடுத்த நிதியாண்டிற்கான சில எதிர்பார்ப்புகளைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகிறது.
நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறையின் பொருளாதாரப் பிரிவால் தயாரிக்கப்பட்டு, தலைமைப் பொருளாதார ஆலோசகரின் மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை, 2024-25 (ஏப்ரல்-மார்ச்) ஆம் ஆண்டின் பொருளாதார நிலை மற்றும் பல்வேறு குறிகாட்டிகள் மற்றும் அடுத்த நிதியாண்டிற்கான சில எதிர்பார்ப்புகளைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகிறது.
பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பட்ஜெட் தினத்தன்று, நிதியமைச்சர் காலை 11 மணிக்கு மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வார். பட்ஜெட் உரையில் அரசாங்கத்தின் நிதிக் கொள்கைகள், வருவாய் மற்றும் செலவினப் திட்டங்கள், வரி மற்றும் பிற முக்கிய அறிவிப்புகள் வெளியாகும். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 4 ஆம் தேதி முடிவடையும் என்று திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

