மேற்கு எல்லையில் சண்டை நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க இந்திய ராணுவ தளபதிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சண்டை நிறுத்த அறிவிப்பை மீறி பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு எல்லைகளில் சண்டை நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், பலமான பதிலடி கொடுக்க ராணுவ தளபதிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவு சண்டை நிறுத்த அறிவிப்பை மீறி பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியதை அடுத்து இந்த உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு எல்லையின் பாதுகாப்பு நிலவரம் குறித்து ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்தார் என்று இந்திய ராணுவம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. நேற்று ராணுவ இயக்குநர் ஜெனரல்கள் (DGMO) தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த ஆய்வ மேற்கொள்ளப்பட்டது. பேச்சுவார்த்தையின் போது எல்லையில் அமைதியை நிலைநாட்டுவது பற்றி ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை (PoK) திரும்ப இந்தியாவிடம் ஒப்படைப்பது மட்டுமே விவாதிக்க வேண்டிய ஒரே விஷயம் என்று இந்தியா கருவதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

காஷ்மீர் பிரச்சினைக்கு யாரும் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை அல்லது அதற்குத் தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் இந்தியா தெளிவாக இருப்பதாகவும் கூறப்பப்படுகிறது. இது இந்தியா இருதரப்புப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரிமை அளிப்பதையும், வெளிப்புற தலையீட்டை விரும்பவில்லை என்பதையும் உறுதிசெய்கிறது.

ராணுவ நடவடிக்கை:

அதே நேரத்தில் ராணுவத் தளபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கும் இந்தியா ஆயத்தமாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. சண்டை நிறுத்தம் குறித்து புரிந்துணர்வு ஒப்ந்தத்தை மீறுவதை இந்தியா எவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்பதையும் உணர்த்துகிறது.

இந்திய ராணுவத்தின் இந்த உத்தரவு, இந்திய எல்லைப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கும் சண்டை நிறுத்த உடன்படிக்கையை உறுதிபடுத்துவதற்கும் தளபதிகளுக்கு அதிகாரமளிக்கிறது.