Asianet News TamilAsianet News Tamil

பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரை மீட்பதற்கான போருக்கு ரெடி ! ராணுவ தளபதி அதிரடி !! நாங்களும் ரெடி !! பாகிஸ்தான் பதிலடி !!

நாடாளுமன்றம் விரும்பினால், இந்திய அரசு உத்தரவை வழங்கினால், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரை  இஸ்லாமாபாத்தின் கட்டுப்பாட்டிலிருந்து கைப்பற்ற இந்திய ராணுவம் நடவடிக்கை எடுக்கும் என்று இந்திய ராணுவத்தின் புதிய தளபதியான மனோஜ் முகுந்த் நாரவனே தெரிவித்துள்ளார்..

india pakistan ready to war
Author
Delhi, First Published Jan 13, 2020, 9:11 AM IST

வரும் 15 ஆம் தேதி தேதி இராணுவ தினம் கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்பு புதிதாக பதவி ஏற்றுக் கொண்ட இந்திய ராணுவத்தின் புதிய தளபதியான மனோஜ் முகுந்த் நாரவனே  செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது "சியாச்சின் பனிப்பாறையில் ராணுவம் விழிப்புடன் இருக்கும், ஏனெனில் அரசியல் ரீதியாக முக்கியமான அந்தப் பகுதியில் இந்தியாவுக்கு எதிராக சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளது என கூறினார்..

india pakistan ready to war

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்று பல ஆண்டுகளுக்கு முன்பு 1994 பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றம் விரும்பினால், அந்த பகுதியும் நம்முடையதாக இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டால் நிச்சயமாக நாங்கள் அதற்கு நடவடிக்கை எடுப்போம்.

india pakistan ready to war

இந்திய ராணுவத்தின் நடத்தை என்பது அரசியலமைப்பிற்கான அதன் விசுவாசம், நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் முக்கிய மதிப்புகள் ஆகியவற்றால் வழிநடத்தப்படும். வடக்கு பகுதியில் அதிக கவனம் செலுத்துவதற்காக ராணுவம் தன்னை மறுசீரமைத்து வருகிறது” என்றார்  நாரவனே,
“முப்படைகளுக்கும் இணைந்து ஒரு தலைவர் பதவியை உருவாக்கியிருப்பது தரைப்படை, விமானப்படை, கப்பல் படை ஆகிய மூன்று சேவைகளை ஒருங்கிணைப்பதில் மிகப் பெரிய படி. இது ஒரு வெற்றியாக இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்" என்று அவர் கூறினார்.

இந்நிலையில் அரசு உத்தரவிட்டால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் என்று இந்திய ராணுவத் தளபதி அறிவித்துள்ளதற்கு பாகிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது.

india pakistan ready to war

அதில் இந்தியாவின் எந்தவொரு செயலுக்கும் பதிலளிக்க பாகிஸ்தான் முழுமையாக தயாராக உள்ளது என்று ராணுவ தலைமை செய்தித் தொடர்பாளர் ஆசிஃப் கபூர் தெரிவித்துள்ளார்.

“இந்தியா பாகிஸ்தான் எல்லையில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இந்திய தலைமைத் தளபதி அளித்த அறிக்கைகள், இந்தியாவில் நடந்துகொண்டிருக்கும் உள்நாட்டுக் கொந்தளிப்பில் இருந்து திசை திருப்பும் வழக்கமான சொல்லாட்சி ஆகும்" என்றும் ஆசிப் கபூர் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார். .

Follow Us:
Download App:
  • android
  • ios