Asianet News TamilAsianet News Tamil

ஊழலற்ற இந்தியா உருவாகிக் கொண்டு இருக்கிறது... மக்களவையில் பிரதமர் மோடி பெருமிதம்!!

உலகில் 5 ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.  

India has emerged as the 5th largest economy in the world says pm modi
Author
First Published Feb 8, 2023, 5:15 PM IST

உலகில் 5 ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பழங்குடியின சமூகத்தின் பெருமையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உயர்த்தியுள்ளார். நாடு சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, குடியரசுத் தலைவரால், இன்று பழங்குடியின சமூகத்தின் பெருமை மற்றும் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. இதற்காக அவருக்கு இந்த நாடும், மக்களும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். 

பழங்குடியின சமுதாயத்துக்கு பெருமை சேர்த்த குடியரசுத் தலைவர்:

தீர்மானம் முதல் வெற்றி வரை குடியரசுத் தலைவர் உரையில் அனைத்தும் இடம்பெற்றிருந்தன. எந்த எம்.பி.,யும் குடியரசுத் தலைவர் உரையில் குறை கண்டுபிடிக்கமுடியவில்லை. குடியரசுத் தலைவர் தனது தொலைநோக்கு உரையின்மூலம் எங்களையும் கோடானுகோடி மக்களையும் வழிநடத்துகிறார். குடியரசுத் தலைவராக அவர் பதவி வகிப்பது, வரலாற்றுச் சிறப்பு மிக்கது மற்றும் நம் நாட்டின் சகோதரிகளுக்கும் மகள்களுக்கும் உந்துசக்தியாக அமைந்துள்ளது. 

குடியரசுத் தலைவர் உரை புறக்கணிப்பு: 

குடியரசுத் தலைவர் உரையை சிலர் புறக்கணித்தனர். பெரிய தலைவர் ஒருவர் ஜனாதிபதியை அவமதித்தார். இது, தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான மனநிலையை காட்டுகிறது. 140 கோடி மக்களும் குடியரசுத் தலைவர் உரையை ஏற்றுக் கொண்டனர். ஆனால், காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி குடியரசுத் தலைவரை அவமானப்படுத்தினார். காங்கிரஸ் கட்சியினர் செய்த வினைகள் அவர்களைக் சுடும். ஊடகங்களில் வெளிச்சம் வர வேண்டும் என்பதற்காக அவரவர் தங்களை வெளிப்படுத்தி கொள்கின்றனர்.

இதையும் படிங்க: பாரம்பரிய முறையில் ஐந்து ஆண்களை மணந்த இமாச்சல் பெண்!

இந்தியாவின் வளர்ச்சி: 

முன்னர் இந்தியா உலகத்தை நம்பியிருந்தது. ஆனால், தற்போது, இந்தியாவை உலகம் நம்பி இருக்கும் காலம் வந்துள்ளது. அரசு நிர்வாகத்தில் ஊழலில் இருந்து மக்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது. இந்தியாவின் அதிகவேகமாக வளர்ச்சி பலராலும் பேசப்படுகிறது. நேற்று முழக்கமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய எம்.பி.,க்களில் பலர் அவைக்கு வரவில்லை. கோவிட், போர் அச்சத்திற்கு இடையே நாட்டை சிறப்பாக நிர்வகித்து வருகிறோம். சவால் இல்லாமல் எந்த வாழ்க்கையும் இல்லை. இந்தியாவுக்குக் கிடைத்த பெருமை சிலருக்கு வருத்தமாக இருக்கிறது. நாடு தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. 

உலகில் 5 ஆவது பொருளாதார நாடு இந்தியா:

உலகில் 5 ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடக இந்தியா உருவெடுத்துள்ளது. அண்டை நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா முன்னேறி வருகிறது. இந்த அரசின் சாதனை, இந்திய மக்களை பெருமையில் ஆழ்த்தி உள்ளது. எதிர்காலத்தை கணித்து கூறும் வல்லுநர்களுக்கு இந்தியா மீது பெரும் நம்பிக்கை உள்ளது. ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை. சிறந்த முடிவுகளை எடுக்கக்கூடிய தேச நலனில் அக்கறை உள்ள நிலையான அரசு தற்போது உள்ளது.

கொரோனா தடுப்பூசியில் இந்தியா முதலிடம்:

உலகளவில் அதிகளவு கோவிட் தடுப்பூசி போட்ட நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கோவிட் காலகட்டத்தில் பல்வேறு நாடுகளுக்கு இந்தியா உதவி செய்துள்ளது. நெருக்கடியான காலத்திலும் டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா வளர்ச்சி கண்டுள்ளது. டிஜிட்டல் இந்தியாவை உலகம் அங்கீகரித்துள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு, அனைத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. நகைச்சுவை தாக்குதல், எதிர் தாக்குதல், விவாதங்கள் போன்றவை பார்லிமென்டில் பொதுவானது. இந்தியா மிகப்பெரிய வாய்ப்புகளை சந்தித்து கொண்டுள்ளது என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. எரிசக்தி நுகர்வில் இந்தியா, உலகின் 3வது மிகப்பெரிய நாடாக திகழ்கிறது. மொபைல்போன் உற்பத்தியில் 2வது இடத்தில் இருக்கிறோம். ஒலிம்பிக், காமன்வெல்த் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் அளப்பறிய சாதனை படைத்து வருகிறோம். கல்வி முதல் ஒவ்வொரு துறையிலும் இந்தியா வரலாற்றை படைத்து வருகிறது.

இதையும் படிங்க: பிப்ரவரி 14 காதலர் தினம் மட்டுமா? இதுவும் தான்! பசு அணைப்பு தினத்தை கையில் எடுத்த விலங்குகள் நல வாரியம்

பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு: 

காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை எந்த தீவிரவாதமும் நடைபெறவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் பாதுகாப்பை பன்மடங்கு பலப்படுத்தியுள்ளோம். வடகிழக்கு மாநிலங்கள் முதல் காஷ்மீர் வரை எந்தவொரு நக்ஸல் நடவடிக்கையும் கிடையாது. தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியில் குற்றங்கள் தடுக்கப்பட்டுள்ளன.

ஊழல் இல்லா இந்தியா:

பத்து ஆண்டுகளுக்கு முன்பு விலைவாசி உயர்வு இரட்டை இலக்கத்தில் இருந்தது. தற்போது கட்டுக்குள் உள்ளது. 2004 - 14 வரை இந்தியாவில் ஊழல் அதிகளவில் இருந்தது. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதால் சிலரால் நிம்மதியாக உறங்க முடியவில்லை. ஊழலில் இருந்து இந்தியா விடுபட்டுள்ளது. நாட்டின் திறமை வெளிப்படுகிறது. முந்தைய 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் வன்முறை நிலவியது. இந்தியாவின் குரல் பலவீனமாக ஒலித்தது. தற்போது 140 கோடி மக்களின் திறமை வெளிப்படுகிறது. மக்களின் திறமைகளை முந்தைய ஆட்சியாளர்கள் மறைத்தனர். 2010 காமன்வெல்த் போட்டியில் ஊழல் இருந்ததால், வீரர்களின் திறமையை வெளிப்படுத்த முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். 

இதனிடையே பிரதமரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காக்கிறார் எனவும் கூறி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios