பாரம்பரிய முறையில் ஐந்து ஆண்களை மணந்த இமாச்சல் பெண்!
ஒரு பெண் குடும்பத்தில் உள்ள அனைத்து சகோதரர்களையும் மணந்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் வழக்கம் இன்னும் சில பகுதிகளில் வழக்கத்தில் உள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கள் பாரம்பரிய முறையில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களைத் திருமணம் செய்துகொண்டு அவர்களுடன் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்தியாவின் மாபெரும் காவியங்களில் ஒன்றான மகாபாரதத்தில் திரௌபதி பஞ்ச பாண்டவர்கள் ஐந்து பேரை திருமணம் செய்துகொண்டார் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். இன்று அப்படி எந்தப் பெண்ணும் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை மணப்பதில்லை என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கலாம்.
ஆனால் இமாச்சலப் பிரதேச மாநில மலையடிவார கிராமத்தில் உள்ள் பெண்கள் திருமணம் செய்துகொள்ளும்போது சகோதரர்கள் அனைவரையும் மணப்பது பாரம்பரிய வழக்கமாகவே பின்பற்றப்பட்டு வருகிறது.
ராஜோ வெர்மா டேராடூனில் உள்ள சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் பெண் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து சகோதரர்களை மணந்திருக்கிறார். சந்த் ராம், பஜ்ஜூ, கோபால், குட்டூ), தினேஷ் ஆகிய ஐந்து பேரை ராஜோ மணந்திருக்கிறார். இருந்தாலும் முதல் கணவர் குட்டூதான். ஆனால் இவர்களுக்குள் எந்த சண்டை சச்சரவும் இல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள்.
சுனிதா தேவி என்ற பெண் சங்லா சமவெளிப் பகுதியில் கின்னார் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் ரஞ்சித் சிங், சந்தர் பிரகாஷ் என்ற இரண்டு சகோதரர்களை கணவர்களாக ஏற்றிருக்கிறார்.
காலம் காலமாக இந்தத் திருமண முறை அப்பகுதி மக்கள் மத்தியில் தொடர்ந்து வருகிறது. 80 வயதைத் தாண்டிய புத்தி தேவி என்ற மூதாட்டியும் சகோதரர்கள் இருவரை மணந்தவர்தான்.
சகோதரர்கள் ஒரே பெண்ணைத் திருமணம் செய்துகொண்டே ஒரே குடும்பமாக வாழும்போது பொருளாதார நிலையைச் சமாளிப்பதற்கு வசதியாக இருக்கிறது என்று அப்பகுதி மூதாட்டிகள் சொல்கிறார்கள். அதே சமயத்தில் இளைய தலைமுறையினர் சில இந்த முறையைப் பின்பற்றாமல் விலகிச் செல்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.
இனிக்க இனிக்க தாம்பத்தியம்! கொஞ்சம் தேன் போதும்.. இப்படி செய்தால் பகல்ல கூட உங்க ஞாபகம் இருக்கும்!!