Asianet News TamilAsianet News Tamil

சனாதனத்தை இழிவுபடுத்திய இந்தியா கூட்டணி கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: ராஜ்நாத் சிங்

உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை இழிவுபடுத்தியதற்காக இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் தெரிவித்துள்ளார்.

INDIA bloc members should apologise for insult to Sanatana Dharma: Rajnath Singh sgb
Author
First Published Sep 4, 2023, 7:13 PM IST

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்மம் குறித்து பேசிய கருத்துக்கு எதிராக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எதிர்க்கட்சிகளை தாக்கிப் பேசியுள்ளார். காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் அசோக் கெலாட் உள்ளட்டவர்கள் இந்த விவகாரத்தில் ஏன் மௌனம் காக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

திங்கட்கிழமை ராஜஸ்தானில் பாஜகவின் பரிவர்த்தன் யாத்திரையின் மூன்றாவது சுற்று தொடக்க நிகழ்ச்சி ஜெய்சால்மரில் நடைபெற்றது. அந்தப் பொதுக் கூட்டத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார். அப்போது, உதயநிதி ஸ்டாலினின் கருத்து குறித்துப் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத், "சனாதன தர்மத்தை இழிவுபடுத்தியதற்காக இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் நாடு அவர்களை மன்னிக்காது" என்று தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி பரிசு! ஆவேசமான உ.பி. சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா!

மேலும், “ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இதுபற்றி ஏன் பேசவில்லை, சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் சனாதன தர்மத்தின் மீது என்ன நினைக்கிறார்கள் என்று ஏன் கூறவில்லை என்று கேட்க விரும்புகிறேன்" என்றார்.

INDIA bloc members should apologise for insult to Sanatana Dharma: Rajnath Singh sgb

பின் காங்கிரஸ் கட்சியை விமர்சித்துப் பேசிய மத்திய அமைச்சர், "சந்திரயான் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. ஆனால், 'ராகுல்யான்' என்றும் ஏவப்பட முடியாது" என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை கிண்டல் செய்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும் மாநில விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை கொரோனா, மலேரியா, டெங்கு காய்ச்சலுக்கு ஒப்பிட்டு, இதுபோன்ற விஷயங்களை எதிர்க்கக்கூடாது, ஒழித்துக்கட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலினின் பேச்சு நாடு முழுவதும் விமர்சனத்தைப் பெற்றுவருகிறது. அவரது பேச்சை பாஜகவினர் அனைவரும் வன்மையாகக் கண்டித்து வருகின்றன. உள்துறை அமைச்சர் அமித் ஷா, உதயநிதி ஸ்டாலின் இந்துக்கள் அனைவரையும் இனப்படுகொலை செய்யத் தூண்டுகிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார். இதனிடயே, தன் பேச்சுக்கு விளக்கம் கொடுத்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிலர் தான் பேசியதைத் திரித்து பரப்புவதாகக் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி 9 வருஷமா ஒரு நாள் கூட லீவு எடுக்கலயாம்! உழைத்துக்கொண்டே இருக்கிறாராம்!

Follow Us:
Download App:
  • android
  • ios