எல்லையில் மோதிக்கொண்ட இந்தியா - சீனா ராணுவம்.. அருணாச்சல பிரதேசத்தில் நடப்பது என்ன ? முழு விபரம் !
அருணாச்சல பிரதேச மாநில எல்லையில் இந்தியா - சீனா படைகள் இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்தியா சீனா இடையே பல காலமாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக் ஆகிய பிராந்தியங்கள் தங்களது நாட்டிற்கு சொந்தமானது என இரு நாடுகளும் உரிமை கோரி வருகின்றன.
சீன எல்லையோரம் அமைந்து இருக்கும் இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்கள் வழக்கம்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்து உள்ளனர். கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இருநாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே திடீரென மோதல் வெடித்தது.
ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும், மோதல் ஏற்பட்ட சிறிது நேரத்தில் இரு தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்று உள்ளனர் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க..அமைச்சராக பதவியேற்கும் உதயநிதி.. எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு - பங்கேற்பாரா ? வெளியே கசிந்த தகவல் !
இரு நாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்தியா - சீனா ராணுவ படைகள் மெல்ல மெல்ல தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டன. இதனை பயன்படுத்தி சீனா இந்திய எல்லை பகுதிகளில் கட்டுமானங்களை ஏற்படுத்தி வருகிறது. அருணாச்சல பிரதேச மாநிலத்தை போன்றே லடாக்கில் உள்ள இந்திய எல்லையோர கிராமங்களையும் சீனா உரிமை கோரி வருகிறது.
குறிப்பாக இந்திய எல்லைக்கு உட்பட்ட லடாக்கின் பேன்காங் சோ பகுதியிலும் சீனா வேகமாக ராணுவ நகரம் ஒன்றை உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று மாதங்களுக்கு முன்பு, செப்டம்பரில், கிழக்கு லடாக்கின் கோக்ரா ஹாட்ஸ்பிரிங் பகுதியில் இந்திய மற்றும் சீன துருப்புக்கள் மோதிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
எல்லைப் பகுதிகளில் அமைதி நிலவும் வரை. ஒப்பந்தங்களைக் கடைப்பிடிக்காத வரையில், தற்போதைய நிலையை மாற்ற ஒருதலைப்பட்ச முயற்சி இல்லை. நிலைமை சாதாரணமாக இருக்க முடியாது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதைப்பற்றி விளக்கினார். 2020 மோதலுக்குப் பிறகு, பிரபலமான சமூக ஊடக தளமான டிக் டாக் மற்றும் 100க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது.
இந்தியாவில் செயல்படும் சீன நிறுவனங்களான Xiaomi, Huawei உள்ளிட்ட செல்போன் நிறுவனங்களில் வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனால் இந்தியா சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்வதை விட அதிகமாக இறக்குமதி செய்கிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்று அரசியல் நோக்கர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க..ஜனவரி 4ம் தேதி பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு !