Indain soldier shot dead by pakistan military
ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்
.காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின் மீது இன்று பகலில் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டர் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியதாகவும், இந்திய வீரர்கள் அதற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
தொடர்ந்து அங்கு நீடித்துவரும் துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவத்தை சேர்ந்த ஒருவர் வீர மரணம் அடைந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
