நிதியாண்டில் 36 லட்சம் வங்கிக்கணக்குகளில் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான பணம்டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று மாநிலங்கள் அவையில் நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார்  தெரிவித்தார்.

மாநிலங்கள் அவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்து அவர் பேசுகையில், “ 114 இ வருமானவரிச் சட்டத்தின்படி, வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிதியாண்டில் ரூ.10 லட்சம் அதற்கு அதிகமாக டெபாசிட் செய்யவர்களின் கணக்கை தெரிவிக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி, இம்மாதம் 14-ந்தேதி வரை, ரூ.10 லட்சம் மற்றும் அதற்கு அதிகமாக, நடப்பு மற்றும் வைப்பு நிதிகளில் 36 லட்சத்து 6 ஆயிரத்து 269 பேர் டெபாசிட் செய்துள்ளனர்’’ எனத் தெரிவித்தார்.

ஆனால், எந்த நிதியாண்டில் இந்த டெபாசிட்கள் செய்யப்பட்டன என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.