fakenote: reverse bank: ‘ரிசர்வ் பேங்கை-ரிவர்ஸ் பேங்க்’ என கள்ளநோட்டில் அச்சிட்டு போலீஸிடம் சிக்கிய கும்பல்
குஜராத்தில் கள்ள நோட்டு அடித்த கும்பல் ஒன்று ரூபாய் நோட்டில் ரிசர்வ் வங்கி என்று அச்சிடுவதற்குப் பதிலாக ரிவர்ஸ் வங்கி என்று அச்சிட்டு போலீஸிடம் சிக்கிக்கொண்டனர். இந்த கும்பலிடம் இருந்து ரூ.25 கோடியை போலீஸார் பறிதல் செய்தனர்.
குஜராத்தில் கள்ள நோட்டு அடித்த கும்பல் ஒன்று ரூபாய் நோட்டில் ரிசர்வ் வங்கி என்று அச்சிடுவதற்குப் பதிலாக ரிவர்ஸ் வங்கி என்று அச்சிட்டு போலீஸிடம் சிக்கிக்கொண்டனர். இந்த கும்பலிடம் இருந்து ரூ.25 கோடியை போலீஸார் பறிதல் செய்தனர்.
குஜராத்தின் சூரத் நகருக்கு உட்பட்ட கம்ரேஜ் நகர் போலீஸாருக்கு கள்ளநோட்டு கடத்தும் கும்பல் ரூ.25 கோடியை ஆம்புலன்ஸில் கடத்திச் செல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.
மாணவியிடம் அநாகரீக பேச்சு: பீகார் பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது என்சிபிசிஆர் விசாரணை
இந்த தகவலையடுத்து, அகமதாபாத்-மும்பை நெடுஞ்சாலையில் போலீஸார் வாகனச் சோதனையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த ஆம்புலன்ஸை போலீஸார் தடுத்து நிறுத்தினர். ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது அதில் மருந்துகள் இருப்பதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து, ஆம்புலன்ஸை போலீஸார் திறந்து சோதனையிட்டபோது, அதில் 6 பெட்டிகள் இருந்தன. இந்த 6 பெட்டிகளில், 1,209 பாக்கெட்டுகள் சீல் வைக்கப்பட்டு இருந்தன. இந்த பாக்கெட்டை போலீஸார் எடுத்து உடைத்துப் பார்த்தபோது அதில் 2ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.
மறந்துடாதிங்க! GATE நுழைவுத் தேர்வுக்கு பணம் செலுத்த இன்று கடைசி நாள்
ஆனால், உண்மையான ரூபாய் நோட்டுக்கும், கள்ள நோட்டுக்கும் எந்தவிதமான வித்தியாசமும் இல்லாமல் அச்சிடப்பட்டு இருந்தது கண்டு போலீஸார் திகைத்தனர் ஆனால், ரூபாய் நோட்டை உன்னிப்பாக போலீஸார் கவனித்தபோது, ரூபாய் நோட்டின் வலது மேல் புறத்தில் “Reverse Bank of India”என அச்சிடப்பட்டிருந்தது.
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா என்று கள்ளநோட்டில் அச்சிடுவதற்குப் பதிலாக கள்ளநோட்டு கும்பல் தவறுதலாக ரிவர்ஸ் வங்கி என அச்சிட்டு சிக்கிக் கொண்டனர். இதையடுத்து, ஆம்புலன்ஸ் ஓட்டுநரை போலீஸார் கைது செய்து, கள்ள நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர். அதன்பின் போலீஸார் விசாரணையில் அது சினிமா ஷூட்டிங்காக மட்டும் பயன்படுத்தும் பணம் என்பதுதெரியவந்தது.
ஆர்பிஐ-யின் எளிய 6 வழிகள்! உங்கள் டெபிட், கிரெடிட் கார்டை எவ்வாறு டோக்கனைஷ் செய்வது?
காவல் கண்காணிப்பாளர் ஹித்தேஷ் ஜோய்சர் கூறுகையில் “ பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டில் ரிசர்வ் வங்கி என்பதற்குப் பதிலாக ரிவர்ஸ் வங்கி என அச்சிடப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் விசாரித்ததில் சினிமா படப்படிப்புக்காக மட்டும் பயன்படுத்துவது எனத் தெரியவந்தது” எனத் தெரிவித்தார்