GATE 2023: மறந்துடாதிங்க! GATE நுழைவுத் தேர்வுக்கு பணம் செலுத்த இன்று கடைசி நாள்

கான்பூர் ஐஐடி நடத்தும் கேட் நுழைவுத் தேர்வுக்கு அபராதம் இன்றி பணம் செலுத்த இன்று கடைசி நாளாகும். 

The registration period for GATE 2023 closes today; check details

கான்பூர் ஐஐடி நடத்தும் கேட் நுழைவுத் தேர்வுக்கு அபராதம் இன்றி பணம் செலுத்த இன்று கடைசி நாளாகும். 

இதுவரை கேட் நுழைவுத் தேர்வுக்காக பதிவு செய்யாத மாணவர்கள், அதிகாரபூர்வ இணையதளமான gate.iitk.ac.in என்ற முகவரியில் சென்று பதிவு செய்யலாம்.

காங்கிரஸ் தேர்தல்: கடைசி நேர மாற்றம்! மல்லிகார்ஜுன கார்கே போட்டி: திக்விஜய் சிங் இல்லை?

ஆனால், இன்று கடைசி நாள் வாய்ப்பை தவறவிட்டவர்கள் அக்டோபர் 7ம் தேதிவரை பதிவு செய்யலாம். ஆனால், அதற்கு காலதாமதக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், இன்றுடன்(செப்டம்பர்30) காலதாமதக் கட்டணம் இன்றி, பதிவுசெய்ய கடைசி நாளாகும். 

கேட்2023ம் ஆண்டு தேர்வுக்கு பதிவுக் கட்டணம் பெண்களுக்கும், பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கும் ரூ.850 ஆகவும், , பிடபிள்யுடி மாணவர்களுக்கு ரூ.1,350 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காந்திநகர்-மும்பை : 3-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

காலதாமதக் கட்டணம்இன்றி கேட் நுழைவுத் தேர்வுக்கு பதிவுசெய்தபின் தேர்வுக் கட்டணம் செலுத்தவேண்டும். அதில் மாணவிகளுக்கும், பழங்குடியின, பட்டியலின விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கட்டணமாக ரூ.1,350 செலுத்த வேண்டும். பிற விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.2,200 செலுத்த வேண்டும்.

கேட்2023 நுழைவுத் தேர்வு 29 பாடங்களில் சிபிடி முறையில் தேர்வு நடத்தப்படுகிறது.  இதில் பங்கேற்கும் மாணவர்கள் 3 தேர்வு மையங்களில் தேர்வு எழுதலாம். 

பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடக்கலை, அறிவியல், வர்த்தகம், கலை ஆகிய பிரிவுகளில் இளநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், 3ம் ஆண்டு படித்துவருவோர் கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

அசோக் கெலாட்டின் முதல்வர் பதவி பறிப்பா?சோனியா காந்தி ஆலோசனை: ராஜஸ்தான் காங்கிரஸில் பரபரப்பு

ஐஐஎஸ்சி பெங்களூரு, மும்பை, டெல்லி, கவுகாத்தி, கான்பூர், காரக்பூர், சென்னை, ரூர்கே ஆகிய ஐஐடி உயர்கல்வி நிலையங்களால் நடத்தப்படும் தேர்வாகும்.இந்த தேர்வில் எடுக்கும் மதிப்பெண் மூலம் முதுநிலை பட்டப்படிப்பு, முனைவர் பட்டம் பெறுவதற்கும் விண்ணப்பிக்கலாம், அல்லது அரசின் உதவித் தொகை பெற விண்ணப்பிக்க முடியும். 

2023, பிப்ரவரி 4,5 தேதிகளிலும், 11,12 தேதிகளிலும் கேட் நுழைவுத் தேர்வு நடக்கிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios