Asianet News TamilAsianet News Tamil

Tokenization: RBI: ஆர்பிஐ-யின் எளிய 6 வழிகள்! உங்கள் டெபிட், கிரெடிட் கார்டை எவ்வாறு டோக்கனைஷ் செய்வது?

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டில் டோக்கனைசேஷன் விதிமுறை அக்டோபர் 1ம் தேதி முதல் அமலாகிறது. கார்டுகளை பயன்படுத்துவோர் விரைவாகவும், பாதுகாப்பாகவும் பரிமாற்றம் செய்ய டோக்கனைசேஷன் செய்வது அவசியமாகும்.

Tokenization :RBI:6 Easy Ways! How Can Your Debit or Credit Card Be Tokenized?
Author
First Published Sep 30, 2022, 1:17 PM IST

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டில் டோக்கனைசேஷன் விதிமுறை அக்டோபர் 1ம் தேதி முதல் அமலாகிறது. கார்டுகளை பயன்படுத்துவோர் விரைவாகவும், பாதுகாப்பாகவும் பரிமாற்றம் செய்ய டோக்கனைசேஷன் செய்வது அவசியமாகும்.

கிரெடிட், டெபிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக கடந்த 2021ம் ஆண்டு டெபிட், கிரெடிட்கார்டு டோக்கனைஷேசன் விதிகள் கொண்டுவரப்பட்டது. 

அக்டோபர் 1 முதல் டோக்கனைசேஷன் அமல்! கிரெடிட், டெபிட் கார்டை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

இந்தப் புதிய விதிகளை ஏற்க 2022, ஜனவரி 1ம் தேதி காலக்கெடு விதித்திருந்தது ரிசர்வ் வங்கி, பல்வேறு நிறுவனங்கள் கோரிக்கையையடுத்து, ஜூலை 1, செப்டம்பர் 30ம் தேதி எனஇருமுறை நீட்டிக்கப்பட்டது.

 

இதற்கான காலக்கெடு முடிந்துவிட்டதால் நாளை முதல்(அக்டோபர் 1) டோக்கனைசேஷன் அமலாகிறது.
டோக்கனைசேஷன் விதிகள் மூலம் வாடிக்கையாளர்கள் ஆன்-லைனில் பொருட்கள், சேவைகள், பணப்பரிவர்த்தனை செய்யும்போது, தங்களின் கார்டுகள் குறித்த முழுமையான விவரங்களை தெரிவிக்காமல் பாதுகாப்பாக பரிவர்த்தனை செய்வதாகும்.

 இந்த முறையில் வாடிக்கையாளர்கள் விவரங்கள் அனைத்தும் ஆன்-லைன் நிறுவனங்கள் பார்க்க முடியாத வகையில் மறைக்கப்படும். அதுமட்டுமல்லாமல் ஆன்-லைன் நிறுவனங்கள் ஏற்கெனவே வாடிக்கையாளர்கள் விவரங்களைச் சேகரித்து வைத்திருந்தாலும் அதையும் அழித்துவிட வேண்டும். அதாவது டெபிட், கிரெடிட் கார்டுகளில் வாடிக்கையாளர் பெயர், பின், சிவிவி, வேலிடிட்டி காலம் என எதையும் சேமிக்கக்கூடாது.

முக்கியத் திட்டங்களுக்கு இல்லை! சில சிறுசேமிப்புத் திட்டங்களுக்கு மட்டும் வட்டி உயர்வு

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு டோக்கனைசேஷன் செயல்முறை கட்டாயமில்லை . இருப்பினும், வாடிக்கையாளர்கள் தங்கள் கார்டுகளை ஆன்லைன் வர்த்தகத் தளத்தில்  டோக்கனைஸ் செய்ய அனுமதிக்கலாமா அல்லது வேண்டாமா என்பதை தேர்வு செய்யலாம்.

 

 டோக்கனைஷேசன் செய்யாவிட்டால், ஒவ்வொருமுறை பொருட்கள் வாங்கும்போதும் வாடிக்கையாளர்கள் தங்களின் கார்டின் 16 இலக்க எண், எக்ஸ்பயரி தேதி, சிவிவி ஆகியவற்றை பதிவுசெய்ய வேண்டும்.

ஆனால், டோக்கனைஸ் செய்துவிட்டால், அந்த டோக்கன் எண்ணை ஆன்லைன் வர்த்தக தளங்களான பிளிப்கார்ட், அமேசான், மிந்த்ரா ஆகியவற்றில்  எதிர்காலப் பயன்பாட்டுக்காக சேமிக்கலாம்.

இஎம்ஐ அதிகரிக்கும்! கடனுக்கான ரெப்போ ரேட் 50 புள்ளிகள் உயர்வு: வட்டி 5.90% மாக உயர்வு:ஆர்பிஐ

ஒவ்வொரு ஆன் லைன் நிறுவனத்துக்கும் டோக்கன் எண் மாறும். ஒரு ஆன்லைன் நிறுவனத்துக்கான டோக்கனை மற்றொரு நிறுவனத்தில் பயன்படுத்த முடியாது. உதாரணமாக அமேசானுக்கு வழங்கப்பட்ட டோக்கனை பிளிப்கார்டில் பயன்படுத்த முடியாது.

 

எவ்வாறு டெபிட், கிரெடிட் கார்டை டோக்கனைஷ் செய்வது?


1.    டெபிட்,கிரெடிட் கார்டு வைத்திருப்போர் எந்த ஆன்-லைன் வர்த்தகத் தளத்துக்கும் சென்று, பொருட்களை வாங்கி, பேமெண்ட் செய்வதை தொடங்கலாம்.

2.    செக்அவுட்டின்போது, கிரெடிட் அல்லது டெபிட் கார்டு விவரங்களைப் பதிவிட வேண்டும். மாறாக கணக்கு வைத்துள்ள வங்கியின் டெபிட் அல்லது கிரெடிட் கார்டை தேர்வு செய்து சேமித்து மற்றவிவரங்களைப் பதிவிட வேண்டும்

3.    ஆர்பிஐ விதியின்படி உங்களை பாதுகாக்க விரும்புகிறீர்களா அல்லது ஆர்பிஐ விதியின்படி டோக்கனைஸ் செய்ய விரும்புகிறீர்களா என்பதில் ஏதாவது ஒன்றைத்தேர்ந்தெடுக்க வேண்டும். 

Tokenization :RBI:6 Easy Ways! How Can Your Debit or Credit Card Be Tokenized?


4.    வங்கியில் கொடுக்கப்பட்ட செல்போன் எண், மின்அஞ்சல் ஆகியவற்றில் வந்துள்ள ஓடிபி எண்ணை பதிவிட்டு பரிமாற்றத்தை முடிக்கலாம்


5.    உங்களுக்கான டோக்கன் உருவாக்கப்பட்டுவிடும். அதை ஆன்லைன் தளத்தில் எதிர்கால பரிமாற்றத்துக்காக சேமிக்கலாம். மாறாக தனிப்பட்ட விவரங்களைப் பதிவிட தேவையில்லை. அதாவது கார்டின் சிவிவி எண், எக்ஸ்பியரி எண் தேவையில்லை


6.    மறுமுறை அதே ஆன்-லைன் வர்த்தகத் தளத்துக்கு சென்றால், ஏற்கெனவே சேமித்து வைக்கப்பட்ட உங்கள் டெபிட் அல்லதுகிரெடிட் கார்டின் கடைசி எண் காண்பிக்கப்படும். இதன் மூலம் உங்கள் கார்டை அடையாளம் கண்டு, பாதுகாப்பான முறையில் பேமெண்ட் செய்யலாம்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios