ncrb: இந்தியாவில் நாள்தோறும் 84 கொலை, 11பேர் கடத்தல்: உ.பி. முதலிடம் என்சிஆர்பி தகவல்
கடந்த 2021ம் ஆண்டில் நாட்டில் நாள்தோறும் சராசரியாக 84 கொலைகள் நடந்துள்ளன, 11 பேர் கடத்தப்பட்டுள்ளனர், ஒருமணிநேரத்துக்கு ஒருவர் விருப்பத்துக்கு மாறாக கட்டாயப்படுத்தப்படுகிறார் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பக(என்சிஆர்பி) அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த 2021ம் ஆண்டில் நாட்டில் நாள்தோறும் சராசரியாக 84 கொலைகள் நடந்துள்ளன, 11 பேர் கடத்தப்பட்டுள்ளனர், ஒருமணிநேரத்துக்கு ஒருவர் விருப்பத்துக்கு மாறாக கட்டாயப்படுத்தப்படுகிறார் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பக(என்சிஆர்பி) அறிக்கை தெரிவிக்கிறது.
2021ம் ஆண்டு இந்தியாவில் குற்றங்கள் என்ற தலைப்பில் என்சிஆர்பி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கொலைக் குற்ற வீதத்தைப் பொறுத்தவரை ஜார்க்கண்ட் மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. கடத்தல் மற்றும் வலுக்கட்டாயப்படுத்துதலில் டெல்லி முதலிடத்தில் இருக்கிறது
இனி ஐதராபாத் பிரியாணி, டெல்லி பட்டர் சிக்கன் உங்களைத் தேடி வரும்; சொமோட்டோவின் புதிய சேவை அறிமுகம்!!
2021ம் ஆண்டில் நாட்டில் மொத்தம் 29ஆயிரத்து 272 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன, 30ஆயிரத்து 132 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது கடந்த 2020ம் ஆண்டைவிட 2021ம் ஆண்டில் கொலை சற்று அதாவது 0.3% அதிகரித்துள்ளது. 2020ம் ஆண்டில் 29,193 கொலைவழக்குகள் பதிவாகின.
2021ம் ஆண்டில் ஒரு லட்சத்து ஆயிரத்து 707 கடத்தல் வழக்குகளும், வலுக்கட்டாயப்படுத்துதில் ஒரு லட்சத்து 4ஆயிரத்து 149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. இது 2020ம் ஆண்டை விட 19.9% அதிகமாகும். 2020ம் ஆண்டில் 84,805 வழக்குகள் பதிவாகியிருந்தன.
கொலை வழக்குகளில் முதல் 5 இடங்களில் உள்ள மாநிலங்களில் முதலிடத்தில் உத்தரப்பிரதேச உள்ளது. இங்கு 3,717 கொலை வழக்குகளில் 3,825 பேர் கொல்லப்பட்டனர். 2வதாக பீகார் மாநிலத்தில் 2,799 கொலை வழக்குகளில் 2,826 பேர் கொல்லப்பட்டனர்.
kejriwal: நாட்டின் முதல் ‘விர்ச்சுவல் பள்ளிக்கூடம்’: கெஜ்ரிவால் தொடங்கிய பள்ளியின் அம்சங்கள் என்ன?
3வதாக மகாராஷ்டிராவில் 2,330 வழக்குகளில் 2381 பேர் கொல்லப்பட்டனர். 4வதாக மத்தியப்பிரதேசத்தில் 2,034 கொலை வழக்குகளில், 2,075 பேர் கொல்லப்பட்டனர். மேற்கு வங்கத்தில் 1,884 கொலை வழக்குகளில் 1919 பேர் கொல்லப்பட்டனர். தலைநகர் டெல்லியல் 459 கொலை வழக்குகளில் 478 பேர் கொல்லப்பட்டனர்.
வார்த்தைத் தகராறு என்ற அடிப்படைதான் பெரும்பாலான கொலைக்கு காரணமாக இருந்துள்ளது. அதாவது 9,765 கொலைகள் தகராறால் நடந்துள்ளன. அதைத்தொடர்ந்து பழிவாங்குதல் மூலம் 3,782 கொலைகளும், பணத்துக்காக 1,692 கொலைகளும் நடந்துள்ளன.
ncrb: இந்தியாவில் தினசரி 89 பெண்கள் பலாத்காரம்; ஒருமணிநேரத்துக்கு 49 குற்றம்: என்சிஆர்பி தகவல்
ஒரு லட்சம்பேருக்கு எத்தனைபேர் கொல்லப்படுகிறார்கள் என்ற கொலைவீதம் ஜார்க்கண்ட் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 4.1% பேர் 1,573 வழக்குகளில், 1606 பேர் கொல்லப்பட்னர். அதைத் தொடர்ந்து அந்தமான் நிகோபர் தீவுகளில் 4%, 16 வழக்குகளில் 18 பேர் கொல்லப்பட்டனர். ஆட்கடத்தலில் உ.பி.(14,554வழக்கு) முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து பீகார்(10,198),மகாராஷ்டிரா(10,502),மத்தியப்பிரதேசம் (2,034), மேவங்கம்(1884) உள்ளன.