Asianet News TamilAsianet News Tamil

kejriwal: நாட்டின் முதல் ‘விர்ச்சுவல் பள்ளிக்கூடம்’: கெஜ்ரிவால் தொடங்கிய பள்ளியின் அம்சங்கள் என்ன?

நாட்டின் முதல் மெய்நிகர் பள்ளிக்கூடத்தை(விர்ச்சுவல் பள்ளிக்கூடம்) டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தொடங்கி வைத்தார். இந்தப் பள்ளிக்கூடத்தில் நாடுமுழுவதிலிருந்து மாணவர்கள் சேர்ந்து படிக்கலாம்.

Kejriwal opens a virtual school for students all over the country.
Author
First Published Aug 31, 2022, 3:40 PM IST

நாட்டின் முதல் மெய்நிகர் பள்ளிக்கூடத்தை(விர்ச்சுவல் பள்ளிக்கூடம்) டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தொடங்கி வைத்தார். இந்தப் பள்ளிக்கூடத்தில் நாடுமுழுவதிலிருந்து மாணவர்கள் சேர்ந்து படிக்கலாம்.

நாட்டிலேயே முதல்முறையாக மெய்நிகர் பள்ளிக்கூடம் டெல்லியில்தான் தொடங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் மெய்நிகர் பள்ளிக்கூடத்தை தொடங்கி வைத்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களுக்கு பேட்டியளித்தாவது: 

bjp: jp nadda: பாஜகவின் அடுத்த தேசியத் தலைவர் இவரா? ஜேபி நட்டா பதவிக்காலம் முடிகிறது

1.    1 டெல்லி அரசு விர்ச்சுவல் வகுப்பறைகள், பள்ளிக்கூடத்தை இன்று தொடங்கியுள்ளது. குறிப்பாக மாணவிகள் பள்ளி்க்கூடத்துக்கு வரஇயலாதசூழலில் இந்த வகுப்பறையை பயன்படுத்தலாம். 

2.    குடும்பச் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பள்ளிக்கு வரமுடியாத பெண்கள், குடும்பத்துக்காக வேலைக்குச் செல்லும் பல குழந்தைகள்,  பள்ளிக்கூடத்துக்கு நேரடியாக வர இயலாத சூழலில் இருக்கும் பெண்களும் அனைவருக்கும் இந்த விர்ச்சுவல் பள்ளிக்கூடம் கல்வி வழங்கும்.

3.    இந்த பள்ளிக்கூடத்தில் 9 வகும்பு முதல் 12ம் வகுப்புவரை மாணவர்கள், மாணவிகள் கல்வி பயிலலாம். 

அருணாச்சலப்பிரதேச எல்லையை சீன உரிமை கொண்டாடுவது அட்டூழியம்: இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் அதிர்ச்சி

4.    மாணவர்கள் இன்று முதலே இந்த விர்ச்சுவல் பள்ளிக்கூடத்தில் சேர விண்ணப்பிக்கலாம். 

5.    நாட்டின் எந்த மாநிலத்தில் இருக்கும் குழந்தையும் விர்ச்சுவல் பள்ளிக்கூடத்தில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் http://www.dmvs.ac.in  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 

6.    13 வயது முதல் 18 வயது வரையில் உள்ளவர்கள், 8ம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் யார் வேண்டுமானாலும் இந்த விர்ச்சுவல் பள்ளிக்கூடத்தில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்யலாம். 

ncrb: இந்தியாவில் தினசரி 89 பெண்கள் பலாத்காரம்; ஒருமணிநேரத்துக்கு 49 குற்றம்: என்சிஆர்பி தகவல்

7.    விர்ச்சுவல் பள்ளிக்கூடத்தில் சேர்ந்த பின் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள், பதிவுசெய்யப்பட்ட வகுப்புகள், ஆன்லைன் டூடோரியல், ஆன்லைன் தேர்வுகள் பாதுகாப்பான இணையதளங்கள் மூலம் நடத்தப்படும்.

8.    உலகளவில் நாம் முதல்நாடாக வர வேண்டும் என்று நினைத்தால், கல்வியை நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் கிடைக்குமாறு செய்ய வேண்டும். 

9.    ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கிடைக்க வேண்டும். 75 ஆண்டுகள் வீணாகிவிட்டது, இனிமேலும் நாம் காலத்தை வீணடிக்கக்கூடாது

இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்தார்

Follow Us:
Download App:
  • android
  • ios