முக்கியமான இடைதேர்தலில் ஆளும் கட்சிதான் வெல்லும் என்ற யூகத்தை கடந்த சில தேர்தல்கள் உடைத்தெறிந்திருக்கிறது. இந்த இடைத்தேர்தலின் முடிவானது அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என எல்லோராலும் கணிக்கப்படும் ஒன்றாகவே இருக்கிறது.

உத்திரப் பிரதேசத்தின் முதல்வர், துணை முதல்வர் ஆகிய இரு பெரும் தலைகள் ராஜினாமா செய்த நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்திருக்கிறது. இந்த அபாரப் படுதோல்வியை மாநில கட்சிகளான சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் மறைமுகமாக கூட்டணி அமைத்து தேசியகட்சிகளான பாஜகவை மண்ணை கவ்வ வைத்திருக்கிறது. காங்கிரசின் தேப்பசிட்டை காலி செய்துள்ளது தேசிய கட்சிகளின் தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநில இடைத்தேர்தலில் பாஜகவை வீழ்த்த சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி பெரிய அளவில் உழைத்து இருக்கிறது. மக்கள் மனநிலையே இதனால் மாற்றப்பட்டு உள்ளது. தற்போது அங்கு அமைக்கப்பட்டு இருக்கும் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும் என்பதால் பாஜகவின் எதிர்கால அரசியலுக்கு இது பெரும் அடியாக விழுந்துள்ளது.

இடைத்தேர்தல் கடந்த 11ம் தேதி நடந்தது. உ.பி. மேலவை தேர்தலில் வெற்றி பெற்று தங்கள் பதவிகளில் தொடருகிறார்கள்.

மார்ச் 11 ஆம் தேதி தேர்தல் நடந்த கோரக்பூர், புல்பூர் ஆகிய இரு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இன்று வாக்குப் பதிவு தொடங்கியதில் இருந்தே சமாஜ்வாதி முன்னிலை வகித்தது. இதில் கொடுமை என்னவென்றால்  கடந்த 25 ஆண்டுகாலமாக முதல்வர் யோகியின் தொகுதியான கோரக்பூரிலாவது பாஜக வெற்றி பெறும் என்று நம்பினர் தொண்டர்கள். ஆனால் தாமரையின் நம்பிக்கையில் மண்ணை வாரிப் போட்டது மாநிலக் கட்சிகள்.

வாக்குப் பதிவு தொடங்கியதில் இருந்தே சமாஜ்வாதி முன்னிலை வகித்தது. சமாஜ்வாதிக்கும் இடையில் 1,500 ஒட்டுகளில் தொடங்கிய வித்தியாசம் போகப் போக அதிகரித்து. பிற்பகலிலேயே இரு MP தொகுதிகளிலும் பாஜக தோல்வி நிச்சயிக்கப்பட்டுவிட்டது. மாலை 5 மணிக்கு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக முடிவுகளை அறிவித்தது. அதில் புல்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கௌஷலேந்திர சிங் பட்டேலை விட 59,613 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.

இதேபோல உபி முதல்வர் யோகியின் நாடாளுமன்றத் தொகுதியான கோரக்பூரில், சமாஜ்வாதி வேட்பாளர் ப்ரவீன் நிஷாத் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட உபேந்திரா தத் சுக்லாவை 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறார்.

இதையடுத்து சமாஜ்வாதியினர் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். பாஜகவால் ஆளும் மாநிலமாக உபியில் இரு முக்கியமான எம்பி தொகுதிகளின் இடைத் தேர்தலில் தோல்வியை சந்தித்திருக்கிறது.

மறைமுகக் கூட்டணிக்கு மக்கள் கொடுத்த வெற்றி... 

உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சிக்கும், பகுஜன் சமாஜ்வாதி கட்சிக்கு சுமார் முப்பது வருடங்களாக இருந்துவந்தது சாதிப் பிரச்சனை. இது யாதவ் இன மக்களுக்கும் தலித் மக்களுக்கும் இடையில் பெரும் கலவரத்தை கூட ஏற்படுத்தி இருக்கிறது. சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக இரண்டு பிரிவினரும் சண்டையும் சச்சரவுமாக இருந்தனர். இப்படி இருக்கையில், பாஜகவை சாய்க்க வேண்டும் என்ற காரணத்துக்காக ஒன்றிணைந்தன. அதுவும் தேர்தலுக்கு ஆறு நாட்கள் முன்னதாகத்தான் சமாஜ்வாதிக்கு ஆதரவு அளிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்தார். தமிழகத்தில் இருக்கும் திமுகவும் – அதிமுகவும் கைகோர்த்து அடித்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் உ.பியில் சமாஜ்வாதி வேட்பாளருக்கு இரண்டு கட்சி தொண்டர்களும் வாக்கு கேட்டார்கள். இந்த தேர்தல் பாஜக வரலாற்றில் மறக்க முடியாத மிகப்பெரும் அடியாக மாறியிருக்கிறது.

இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், ‘நன்றி மாயாவதிஜி...’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

“காங்கிரஸின் டெபாசிட்டை காலி பண்ண கொடுமை”

இந்த களேபரத்தில் பலரும் கவனிக்க மறந்த ஒரு விஷயம் இவ்விரு தொகுதிகளிலும் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்கள் டெபாசிட் தொகையை இழந்திருக்கிறார்கள்.

இதில் கொடுமை என்னன்னா நேற்று முன்தினம் தான் சோனியா காந்தி எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க விருந்து நடத்தினார். இன்று தேர்தல் முடிவு காங்கிரஸுக்கு அந்த தகுதி இருக்கிறதா என்பதை ஒரு கேள்வியாக எழுப்பிவிட்டது. இன்று காங்கிரஸ் டெபாசிட்டை இழந்திருக்கும் புல்பூர் தொகுதி ஒரு காலத்தில் ஜவஹர்லால் நேருவின் தொகுதி என்பது தான் டிவிஸ்ட்...