முதல் முறையாக மனிதருக்குப் பரவிய தாவரப் பூஞ்சை நோய்! மருத்துவர்கள் அதிர்ச்சி!
தாவரங்களில் ஏற்படும் பூஞ்சைத் தொற்று நோய் ஒரு மனிதருக்கு ஏற்பட்டிருப்பது இதுதான் முதல் முறை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பல ஆண்டுகளாக காளான்கள் பற்றி ஆய்வு செய்துவந்த கல்கத்தாவைச் சேர்ந்த 61 வயதான ஆராய்ச்சியாளர் ஒருவர் தாவர பூஞ்சையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். உயிருக்கே ஆபத்தான இந்தத் தாவரப் பூஞ்சை மனிதரைப் பாதித்திருப்பது இதுதான் உலகிலேயே முதல் முறை என்று கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டிருந்த ஆராய்ச்சியாளர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இப்போது குணமடைந்துவிட்டார். அவர் ஒரு தாவர நுண்ணுயிரியல் நிபுணர் என்றும், அவர் தனது ஆராய்ச்சிக்காக அழுகும் பொருட்கள், காளான்கள் மற்றும் பல்வேறு தாவர பூஞ்சைகளுடன் பணியாற்றி வருகிறார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
"அழுகிப்போகும் பொருட்களுக்கு தொடர்ச்சியாக செயல்பட்டு வந்தது இந்த அரிய தொற்றுநோயை ஏற்படுத்தியிருக்கலாம். தாவர பூஞ்சைகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும்போது தாவர நோய்க்கிருமிகள் மனிதர்களையும் பாதிக்கும் என்பதை இது நிரூபிக்கிறது” என்று கொல்கத்தாவில் மருத்துவமனை மருத்துவர்கள் அறிக்கை கூறுகிறது.
அமேசான் பெயரைச் சொல்லி பணம் பறிக்கும் புதிய மோசடி: காவல்துறை எச்சரிக்கை
இந்தக் கண்டுபிடிப்புகள் சமீபத்தில் மெடிக்கல் மைக்காலஜி கேஸ் ரிப்போர்ட்ஸ் ஜர்னல் (Medical Mycology Case Reports Journal) என்ற இதழில் வெளியிடப்பட்டன.
காண்ட்ரோஸ்டீரியம் பர்ப்யூரியம் என்ற பூஞ்சை தாவரங்களில் 'வெள்ளி இலை நோய்' எனப்படும் நோய் ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது. இந்தப் பூஞ்சைகளால் தாவரங்களின் இலைகளைப் பாதிக்கிறது. படிப்படியாக இலைகள் உதிர்ந்து அந்தத் தாவரத்தைப் பட்டுப்போகச் செல்கிறது.
பாதிக்கப்பட்ட ஆய்வாளருக்கு இருமல், குரல் கரகரப்பு, தொடர் தொண்டை அழற்சி, சோர்வு, பசியின்மை மற்றும் எச்சில் விழுங்குவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தன. அவருக்கு நீரிழிவு, எச்.ஐ.வி, சிறுநீரகம் அல்லது வேறு எந்த நாட்பட்ட நோயும் இல்லை. அதுமட்டுமின்றி அவர் எந்த நோய் எதிர்ப்பு மருந்துகளையும் உட்கொள்ளவில்லை.
பரிசோதனைகள் செய்துபார்த்தபோது அவருக்கு மூச்சுக்குழலில் சீழ் பிடித்திருப்பது தெரியவந்தது. பூஞ்சை தொற்று இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டன. டாக்டர்கள் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்து சிகிச்சை அளித்துள்ளனர். பல பத்தாண்டுகளாக புவி வெப்பமடைதல், சுற்றுச்சூழல் அமைப்புகளில் மாற்றம், திட்டமிடப்படாத நகரமயமாக்கல் மற்றும் பிற செயல்பாடுகளால் பல புதிய நோய்க்கிருமி பூஞ்சைகள் தோன்றியுள்ளன. இந்நிலையில், மனிதருக்கு தாவரப் பூஞ்சைத் தொற்று ஏற்பட்டிருப்பது அந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
பிரதமர் மோடியின் நிகழ்ச்சியைப் புறக்கணித்த தெலுங்கானா முதல்வர்