ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. வீட்டுக்கு வீடு ரேஷன் திட்டம் - eKYC பற்றி முக்கிய அப்டேட்!
வீட்டுக்கு வீடு ரேஷன் திட்டம் உள்ளிட்ட, ரேஷன் அட்டை தொடர்பான பல முக்கிய தகவல்களை தற்போது அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

eKYC கட்டாயம்
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது அரசு, அதன்படி முதலாவதாக வருவது eKYC. தற்போது ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் இந்த eKYC செய்துகொள்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளன(ஆகஸ்ட் 31 வரை). உங்களுடைய ஆதார் கார்டினை உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கும் பணி தான் இந்த eKYC.
இமாச்சலப் பிரதேச அரசு
இந்த eKYC விவகாரத்தில் இமாச்சல அரசு ஒருபடி மேலே சென்று, குறிப்பிட்ட நாளுக்கு ரேஷன் அட்டையை ஆதாருடன் இணைக்காத மக்கள், அவர்களுடைய ரேஷன் அட்டையின் பலனை பெறமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளது. ரேஷன் கார்டு ஆதாருடன் சரிபார்க்கப்பட்ட பின்னரே அவர்களுக்கு மலிவான ரேஷன் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது.
மண் அள்ளி செல்ஃபி எடுங்கள்! சுதந்திர தினம் கொண்டாட புதுசா ஐடியா கொடுக்கும் பிரதமர் மோடி
மேலும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்காக ஹிமாச்சல் மாநில அரசு மேலும் சில பெரிய ஏற்பாடுகளை செய்துள்ளது. டாடா மற்றும் டாபர் தயாரிப்புகளை, சந்தை விலையை விட குறைந்த விலையில் நுகர்வோருக்கு கிடைக்கும் வண்ணம் ஆவணம் செய்து வருகின்றது.
ககுறிப்பாக பற்பசை, சோயாபீன், எண்ணெய், உப்பு, தேயிலை இலைகள், பருப்பு வகைகள், ஷாம்பு, மாவு, ரவை, கடுகு எண்ணெய், பாதாம், எண்ணெய் மற்றும் பிற பொருட்களும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டையை கிளப்புபம் பஞ்சாப்
கர் கர் ரேஷன் யோஜனா, அதாவது வீட்டுக்கு வீடு ரேஷன் திட்டத்தை மீண்டும் தொடங்கலாம் என்று அரசு முடிவுசெய்துள்ளது. முன்னதாக இந்த திட்டம் சில பிரச்சனைகளால் கிடப்பில் போடப்பட்டது. நியாய விலைக் கிடங்கு வைத்திருப்பவர்களையும், இத்திட்டத்தின் கீழ் கொண்டு வந்து அவர்களுக்கு ரேஷன் விநியோகம் செய்வதற்கான திட்டம் அங்கு தயாரிக்கப்பட்டு வருகிறது.
வெட்கக்கேடான ஆட்சி! மணிப்பூர் ஆளுநரைச் சந்தித்து முறையிட்ட 'இந்தியா' கூட்டணி தலைவர்கள்