imd weather: பணவீக்கத்தால் மக்கள் அவதிப்பட்டுவரும் நிலையில் ஆறுதல் அளிக்கும் விதத்தில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை இயல்பாகவே இருக்கும் நீண்டகால சராசரியில் 99 சதவீதம் இருக்கும் என்று இந்திய வானிலை மையம்(ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
பணவீக்கத்தால் மக்கள் அவதிப்பட்டுவரும் நிலையில் ஆறுதல் அளிக்கும் விதத்தில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை இயல்பாகவே இருக்கும் நீண்டகால சராசரியில் 99 சதவீதம் இருக்கும் என்று இந்திய வானிலை மையம்(ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
99% மழை
நீண்ட காலசராசரியில் மழை அளவு 89 சதவீதம் இருந்தாலே இயல்பான மழை. ஆனால், 99 சதவீதம் இருக்கும்போது இயல்பான மழைக்கு வாய்ப்புள்ளது என்பது வானிலை மையத்தின் கருத்தாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்திய வானிலை மையம் ஏப்ரல் மற்றும் ஜூன் மாதத்தில் பருவமழை குறித்து நீண்டகால சராசரியை அளவை வெளியிடும் அந்தவகையில் இன்று வெளியாகியுள்ளது.

நாட்டின் 74.9 சதவீத மழையைத் தருவது தென்மேற்கு பருமழைதான். இதில் ஜூன் மாதம் 19.1 சதவீதமும், ஜூலை மாதம் 32.3 சதவீதமும், ஆகஸ்டில் 29.4%, செப்டம்பரில் 19.3% மழையும் கிடைக்கும்
எல்பிஏ
1971 முதல் 2020ம் ஆண்டுவரை புள்ளிவிவரங்களைச் சேகரித்ததில் நீண்டகால சராசரியில் ஜூன் முதல் செப்டம்பர் வரையி 87 சென்டிமீட்டர் மழைக்கு வாய்ப்புள்ளது. 1961 முதல் 2010ம் ஆண்டுகளுக்கு இடையிலான புள்ளிவிவரங்களைக் கணக்கிட்டதில் முன்பு 88.1 செ.மீ மழைகிடைக்கும் எனத் தெரியவந்தது.
நீண்டகாலச் சராசரியில் 96 முதல் 104 சதவீதம் என்பது இயல்பான மழையாகும். அந்தவகையில் 99 சதவீதம் என்பது இயல்பான மழையாகும்.
இந்த வாரத்தில் தனியார் வானிலை மையமான ஸ்கைமெட் வெளியிட்ட கணிப்பில் 2022ம் ஆண்டில் நீண்ட காலச் சராசரியில் மழையளவு 88செ.மீ இருக்கும் எனத் தெரிவித்தது.

தமிழகம், கேரளா
இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், 2022ம் ஆண்டுக்கான பருவமழை, வடகிழக்கு இந்தியா, ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் தமிழகம், கேரளா, லடாக்கில் இயல்புக்கும் அதிகமாக இருக்கும்.
ஸ்கைமெட் கணிப்பின்படி, ஜூன் முதல் ஜூலை வரையிலான காலம், ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தைவிட சிறப்பாக இருக்கும் எனக் கணித்துள்ளது
தென்மேற்கு பருவமழை சிறப்பாக இருக்கும் பட்சத்தில் வேளாண் உற்பத்தி சிறப்பாக நடக்கும், அதனால் விளைப் பொருட்கள் அதிகமாக விலைவாசி குறைந்து,பணவீக்கமும் குறையும்.

நீர்பாசன வசதியைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த விவசாய நிலங்களில் பாதியளவு வானம்பார்த்த பூமியாக, மழைநீரை நம்பியே இருக்கிறது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், பசிபிக் பிராந்தியத்தின் பூமத்திய ரேகைப் பகுதியில் லா நினா நிலவுகிறது. அதேபோல பசிபிக் இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவும் கடற்பகுதி வெப்பம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது, அது ஜூன் மாதம் முழுவிவரங்கள் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது
