Asianet News TamilAsianet News Tamil

இந்த மாநிலங்களில் அடுத்த 5 நாட்கள் கடும் வெப்ப அலை வீசும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..

அடுத்த ஐந்து நாட்களில், இந்தியா முழுவதும் வெப்ப அலை தொடரும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

IMD issues severe heat wave warning for 5 states Rya
Author
First Published Apr 23, 2024, 3:38 PM IST

நாட்டின் பல்வேறு இடங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த ஐந்து நாட்களில், கிழக்கு இந்தியா முழுவதும் வெப்ப அலை தொடரும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்த வார தொடக்கத்தில், அதிகபட்ச வெப்பநிலை ஒடிசா மற்றும் ராயலசீமாவில் 42-45 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தது.  மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், தென்மேற்கு மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, கடலோர ஆந்திரப் பிரதேசம்  ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில்40-42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவானது. மேலும், பீகாரின் பல பகுதிகளில் வெப்பநிலை, கிழக்கு மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மற்றும் கிழக்கு உத்தரப்பிரதேம் ஆகிய இடங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது வெயில் எப்படி இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

வரும் நாட்களில் மேற்கு வங்கத்தில் இயல்பை விட 4-6 டிகிரி செல்சியஸ் அதிக வெப்பநிலை பதிவாகும் என்று கூறப்பட்டுள்ளது. பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, துணை இமயமலை மேற்கு வங்காளம், சிக்கிம், கடலோர ஆந்திரப் பிரதேசம், ராயலசீமா, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், சத்தீஸ்கர், தெற்கு மத்தியப் பிரதேசம், மற்றும் தெலுங்கானா ஆகிய இடங்களில் இயல்பை விட 2 முதல் வெப்பநிலை அதிகமாக பதிவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த ஐந்து நாட்களுக்கு மேற்கு வங்கத்தில் ஒரு சில இடங்களில் கடுமையான வெப்ப அலை நிலைகள் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் உள்துறை கர்நாடகா, ஒடிசா, கிழக்கு மற்றும் மேற்கு உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்ட் ஆகியவற்றில் குறிப்பிட்ட காலங்களில் வெப்ப அலை நிலைகள் இருக்கும்.

கடலோர ஆந்திரப் பிரதேசம், ஏனாம், ராயலசீமா, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கடலோர கர்நாடகா, கொங்கன், கோவா, கேரளா, மாஹே, துணை-இமயமலை மேற்கு வங்காளம், பீகார் மற்றும் ஒடிசா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வெப்ப அலை வீசக்கூடும்.

பிரதமர் மோடி வெறுப்பு பேச்சு: டெல்லி காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புகார்!

இதேபோல், குஜராத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பிறகு 2-4 டிகிரி செல்சியஸ் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் மற்ற பகுதிகளில் குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் நிலையான அதிகபட்ச வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios