மனைவியுடன் தகாத உறவு.. நண்பனின் தொண்டையை அறுத்து, ரத்தத்தை குடித்த கணவர்.. அதிர்ச்சி சம்பவம்..
மனைவியுடன் தகாத உறவில் இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தில், நபர் ஒருவர் நண்பரின் தொண்டையை அறுத்து அவரின் ரத்தத்தை குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தனது மனைவியுடன் தொடர்பு வைத்துள்ளார் என்று சந்தேக அடைந்த கணவர், தனது நண்பரின் கழுத்தை அறுத்து அவரது இரத்தத்தை குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் சிக்கபல்லாப்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர் விஜய் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிந்தாமணி நகரில் வசிக்கும் பத்தலப்பள்ளியைச் சேர்ந்த விஜய், மதன்பள்ளியைச் சேர்ந்த மரேஷ் ஆகிய இருவரும் ஓட்டுநர்களாக உள்ளனர். மரேஷ் தனது மனைவியுடன் தொடர்பு வைத்திருப்பதாக சமீபத்தில் விஜய்க்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனால் மரேஷை பழிவாங்க நினைத்த விஜய், அவரை கொல்ல திட்டமிட்டார்.
இந்த விஷயத்தை பற்றி விவாதிக்க கடந்த 19-ம் தேதி விஜய்யும், மரேஷும் சந்தித்து பேசியுள்ளனர். இருப்பினும், விவாதம் கடுமையான வாக்குவாதமாக மாறியது. விஜய் ஆத்திரத்தில் கூரிய ஆயுதத்தால் மரேஷின் கழுத்தை அறுத்து ரத்தத்தை குடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை சிந்தாமணி தாலுகாவில் உள்ள கிராசிங் அருகே சென்ற ஒருவர் கேமராவில் படம் பிடித்துள்ளார்.
பாஜக எம்எல்ஏ அலுவலகத்தில் வாலிபர் வெட்டி படுகொலை; புதுவையில் பதற்றம்
அந்த வீடியோவில், விஜய் அவரை கத்துவது போலவும், மரேஷ் தொண்டை வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்க்க முடிகிறது. பின்னர் அவர் கீழே குனிந்து, மரேஷின் அடிபட்ட தொண்டையில் இருந்து வெளியேறும் இரத்தத்தை குடிக்க முயன்றதையும் பார்க்க முடிகிறது. அந்த வீடியோவில் விஜய் மரேஷை குத்துவதையும் காண முடிகிறது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து விஜய் கைது செய்யப்பட்டார். கெஞ்சர்லஹள்ளி காவல் நிலையத்தில் விஜய் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில் மரேஷ் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முதல் மனைவிக்கு தெரியாமல் 2வது திருமணம்; லாரி ஓடடுநர் கைது