நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. என்ற  நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் இருமுறை நடத்தி வருகிறது.

ஆங்கிலம், இந்தி மற்றும் குஜராத்தி மொழிகளில் மட்டுமே இதுவரை நடத்தப்பட்டு வரும் இந்த ஜே.இ.இ. முதன்மைத்தேர்வு 2021-ம் ஆண்டு முதல் தமிழ், தெலுங்கு, உருது உள்ளிட்ட 11 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

2020 ஜனவரி மற்றும் ஏப்ரலில் நடத்தப்பட உள்ள தேர்வுக்கான வினாத்தாள், அட்டவணை உள்ளிட்டவற்றை முன்கூட்டியே தயாரித்து விட்டதால் உடனடியாக மற்ற மாநில மொழிகளில் தேர்வு நடத்த இயலாது என்றும், 2021-ம் ஆண்டு முதல் 11 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்றும், அவரவர் தாய்மொழியிலேயே ஜே.இ.இ. முதன்மைத்தேர்வை எழுதலாம் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.